அங்கவை சங்கவை
அங்கவை சங்கவை ஆகியோர் சங்க காலத்தில் வாழ்ந்த இரு சகோதரிகள் ஆவர். இவர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியமான புறநானூற்றில் கிடைக்கிறது.
இவர்கள் "முல்லைக்குத் தேர் தந்த பாரி வள்ளலின் பெண்கள்தான் அங்கவை, சங்கவை. மாட மாளிகையில் வாழ்ந்த இவர்கள் தங்கள் தந்தையை இழந்து தவித்தபோது அடைக்கலம் தந்து மணமுடித்து வைத்தவர் வள்ளல் பாரியின் நண்பரான புலவர் கபிலர்" என்றும் கூறப்படுகிறது.
சிவாஜியில் கேலிதொகு
ரஜினிகாந்தின் சிவாஜி படத்தில் அங்கவை சங்கவை என்ற இரு கதாப்பாத்திரங்கள் கேலிப்படுத்தப்பட்டது குறித்த தமிழ் அறிஞர்கள் பலர் கண்டனம் தெரிவித்தார்கள். இந்த படத்தில் கறுப்புச்சாயம் பூசப்பட்ட, வரம் தேடும் பெண்களாக சித்தரிக்கப்பட்டிருந்தனர். தமிழ் பெண் ஒருவரை விரும்பும் கதாநாயகப் பாத்திரம் இந்த பெண்களை கிண்டல் செய்வதாக காட்சிகள் அமைந்திருந்தன.