அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் (இந்தியா)

இந்திய அரசியலில் சில வரையரைகறைகளைக் கொண்டு அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என அழைக்கப்படுகின்றன. கட்சிகளின் அங்கிகாரம் பத்து ஆண்டுகளுக்ககு ஒரு முறை ஆய்வு செய்யப்படுமென 2016 ஆகஸ்ட் 23 இல் தேர்தல் ஆணையம் விதிகளில் திருத்தம் செய்தது. [1]

மாநில கட்சிக்கான தகுதிகள்

தொகு

கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு தகுதியை பெற்றால் மாநில கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

  1. சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.[2]
  2. மக்களவை தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும்.
  3. மக்களவை அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 6 சதவீத வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெல்ல வேண்டும் அல்லது 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெல்ல வேண்டும்.
  4. எந்த தொகுதியில் வெல்லாவிடினும் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.

தேசிய கட்சிக்கான தகுதிகள்

தொகு

கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு தகுதியை பெற்றால் தேசிய கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவிக்கும்.

  1. மொத்த மக்களவை இடங்களில் 2 சதவீத இடங்களில் குறைந்தபட்சம் 3 வெவ்வேறு மாநிலங்களில் வெற்றி பெற வேண்டும்.
  2. மக்களவை அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
  3. 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும்

.

ஆதாரங்கள்

தொகு
  1. கட்சிகள் அங்கீகாரம் 10 ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு: தேர்தல் விதிகளில் திருத்தம்- பிடிஐ 23 ஆகஸ்ட் 2014
  2. நாடு முழுவதும் 2,000-க்கும் அதிகமான கட்சிகள்; 9 ஆண்டுகளில் இரு மடங்கான கட்சிகள் எண்ணிக்கை: விதிகளை மீறினால் பதிவை ரத்து செய்யும் அதிகாரம் கிடைக்குமா? -க.சக்திவேல் இந்து தமிழ் திசை 15 ஜூலை 2018

வெளி இணைப்புகள்

தொகு

‘அங்கீகரிக்கப்பட்ட கட்சி’ என்றால் நிபந்தனைகள் என்ன? 15 மார்ச் 2019 புதிய தலைமுறை