அங்க அடையாளம்

அங்க அடையாளம் (Personal Identity) என்பது ஒரு மனிதனின் தனித்த சிறப்புகளை வைத்து அவனை அடையாளம் காண்பது ஆகும். அங்க அடையாளம் காண்பது பள்ளி மாணவர்கள் குறித்து கல்வித் துறையினரும் மற்றும் குற்றம் சாட்டப்பட்டுக் கற்பழிப்பு, கொலை, வன்செயல் ஆகிய குற்றம் புரிந்தவர்களையும், விபத்தில் மயக்கம் உற்றோரையும், இறந்த உடலையும் அடையாளம் காணவும் காவல் துறையினருக்கு உதவியாக உள்ளது.[1]

அங்க அடையாளத்தின் முக்கியத்துவம்

தொகு

உரிமை நீதிமன்றங்களில் (civil court) ஆயுள் காப்பீட்டுத் தொகையைப் பெறவும், விடுபட்ட ஓய்வூதியத்தைப் பெறவும், அங்க அடையாளங்களை முக்கியமாக கவனிக்கிறார்கள். உயிருள்ளவரின் அங்க அடையாளங்களை அவரது அனுமதியின்றி யாரும் கணக்கில் கொள்ளக் கூடாது. இறந்த உடல் அழுகுவதாலும், பறவைகள் கொத்துவதாலும், குற்றவாளிகள் பிணத்தை விரைவில் புதைப்பதாலும், தீக்காயங்களால் ஏற்பட்ட இறப்பாலும் உடலை அடையாளம் காண்பது கடினமானாலும், அடையாளம் காண வேண்டியது அவசியம் ஆகும்.

அங்க அடையாளம் காணும் முறை

தொகு

இனம், பாலினம், அகவை, நிறம், உடல் தோற்றம் ஆகியக்கூறுகளின் அடிப்படையில் அங்க அடையாளம் காணலாம்.[2][3][4]

மேற்கோள்

தொகு
  1. Personal Identity [Internet Encyclopedia of Philosophy]
  2. Personal Identity (Stanford Encyclopedia of Philosophy)
  3. Identity (Stanford Encyclopedia of Philosophy)
  4. N.J. Modi - Textbook of Medical Jurisprudence and Toxicology, 15th Ed., N.J. Tripathi Pvt. Ltd Book sellers. - 1965
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்க_அடையாளம்&oldid=3679465" இலிருந்து மீள்விக்கப்பட்டது