அசிட்டைல்நீக்குநொதி தடுப்பிகள்
அசிட்டைல்நீக்குநொதி தடுப்பிகள் ( histone deacetyallase inhibitors, HDAC inhibitors) மூலக்கூற்று உயிரியலில் ஆய்வுக்காக பயன்படும் ஒரு தடுப்பூட்டி ஆகும். பின்னாளில் புற்று நோய் மற்றும் மூளையில் காயங்கள் ஏற்படும்போது , நிறப்புரியில் (chromosome) பல மாற்றங்கள் ஏற்படுகின்றன என கண்டுபிடிக்கப்பட்டன. நிறப்புரியில் உள்ள இசுடோன் புரதத்தில் ஏற்படும் எபிமரபியல் மாற்றங்களால் புற்று நோய் மிகைபடுத்தப்டுகின்றன என்றும், மூளையில் ஏற்படும் காயங்களினால் நரம்பு உயிரணுக்களில் இறப்பு நிகழ்கின்றன (programmed cell death or apotopsis) என அறியப்பட்டது. இவைகள் இசுடோன் புரதத்தில் ஏற்படும் அசிட்டைல் நீக்கமும் (deacetyalation) ஒரு கரணியம் ஆகும். இதனால் அசிட்டைல் நீக்கம் தடுப்பூட்டி மருந்துகள் (வல்புரோயிக் காடி, சோடியம் பினைல் பியுட்ட்ரட், phenylbutyrate and valproic acid) கொடுக்கப்படும் போது புற்று நோய், மூளை காயங்களினால் ஏற்படும் பாதிப்புகள் குறைக்கப்படுகின்றன. மேலும் இம்மருந்துகள் இன்னும் ஆய்வு நிலையிலே உள்ளன. ஏனெனில் ஆய்வு விலங்கு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகையான முடிவுகளை தருவதால் ஒரு நிலையான நிலைப்பாட்டுக்கு ஆய்வாளர்கள் வர முடியவில்லை.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Histone deacetylase inhibitors". Journal of Medicinal Chemistry 46 (24): 5097–116. November 2003. doi:10.1021/jm0303094. பப்மெட்:14613312. https://pubs.acs.org/doi/10.1021/jm0303094.
- ↑ "Macrocyclic histone deacetylase inhibitors". Current Topics in Medicinal Chemistry 10 (14): 1423–40. 2010. doi:10.2174/156802610792232079. பப்மெட்:20536416.
- ↑ "Antimalarial and antileishmanial activities of histone deacetylase inhibitors with triazole-linked cap group". Bioorganic & Medicinal Chemistry 18 (1): 415–25. January 2010. doi:10.1016/j.bmc.2009.10.042. பப்மெட்:19914074.