அசிபுன் நகெர்
அசிபுன் நகெர் (Hasibun Naher) வங்காளதேசத்தைச் சேர்ந்த பயன்பாட்டுக் கணித ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். வளரும் உலகத்திற்கான அறிவியலின் பெண்கள் அமைப்பு ஆண்டுதோறும் வழங்கிவரும் எல்சிவியர் அறக்கட்டளை விருது 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அசிபுன்னுக்கு வழங்கப்பட்டது. [1] இவ்விருதைப் பெற்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த ஐந்து இளம் பெண்களில் இவரும் ஒருவராவார். சுனாமிகள் எவ்வாறு உருவாகின்றன என்பதற்கான கணிப்புகளை மேம்படுத்துவதற்காக கணிதத்தைப் பயன்படுத்துவதை இவரது ஆராய்ச்சி உள்ளடக்கியுள்ளது. இவர் தற்போது டாக்காவில் உள்ள தனியார் ஆராய்ச்சி பல்கலைக்கழகமான பிராக் பல்கலைக்கழகத்தில் கணிதத்தின் இணை பேராசிரியராக உள்ளார். [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bert, Alison; Francescon, Domiziana (15 February 2018). "Elsevier at #AAASmtg: live updates with Women in Science winners". Elsevier.
- ↑ "Bangladeshi scholar wins int'l award". The Daily Star. 19 February 2018.