அசிமுல்லா கான்
நானா சாஹிப்பின் திவானாகவும் பின்னர் பிரதம மந்திரியுமாக இருந்தவர் திவான் அசிமுல்லா கான் என்று அழைக்கப்படும் அசிமுல்லா கான் யூசுப்சாய் (1830-1859). ஆரம்பத்தில் நானா சாஹிப்பின் திவானாகவும் பின்னர் பிரதம மந்திரியாகவும் அவர் நியமிக்கப்பட்டார். "புரட்சியின் தூதர்" என்று அவர் அழைக்கப்பட்டார்.[1] 1857-ல் நடந்த இந்தியக் கலகத்தில் அசிமுல்லா கான் பங்கேற்றார். நானா சாஹிப் போன்றவர்களின் கருத்தியல் ரீதியான தாக்கம் அவரிடம் காணப்பட்டது.[2]
அசிமுல்லா கான் ஒரு திறமையான தலைவரும் உண்மையான சுதந்திர போராட்ட வீரருமாக இருந்தார். இந்து-முஸ்லிம் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவரும் மற்றும் பிரித்தானிய ஆட்சியிலிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற முயன்றவருமாவார் அவர்.[1]
வாழ்க்கை பதிவு
தொகு1830-ல் சாதாரணமான ஒரு முஸ்லிம் குடும்பத்தில் அவர் பிறந்தார். ஆரம்ப காலத்தில் அவர் பல பிரித்தானிய அதிகாரிகளின் கீழ் செயலாளராக பணியாற்றியுள்ளார். பின்னர் அவர் இரண்டாம் பேஷ்வா பாஜி ராவின் வளர்ப்பு மகனான நானா சாஹிப்பின் செயலாளராகவும் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார்.[3]
இறப்பு
தொகு1857-ஆம் ஆண்டு கலகத்திற்குப் பிறகு, அவர் பிரித்தானிய இந்தியாவிலிருந்து தப்பி நேபாளத்தின் தெராய்க்கு வந்து, 1859-ன் பிற்பகுதியில் காய்ச்சலால் அசிமுல்லா கான் இறந்தார். ஆனால், சில வரலாற்றாசிரியர்கள் அவர் மாறுவேடத்தில் கல்கத்தாவை அடைய முயன்றபோது பெரியம்மை நோயால் இறந்திருக்கலாம் அல்லது இந்தியாவில் இருந்து தப்பிக்கும்போது கான்ஸ்டான்டினோப்பிளில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் நம்புகிறார்கள்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "காப்பக நகல்". பார்க்கப்பட்ட நாள் 2019-08-19.
- ↑ https://www.tandfonline.com/doi/abs/10.1080/00856400802441912?journalCode=csas20
- ↑ https://www.pinterest.com/pin/373728469051523483/
- ↑ டேவிட், சவுல் (2003). இந்திய கலகம். p. 373. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-141-00554-8.