அசீனா முர்சீத்

அசீனா முர்சீத் (Hasina Murshed) என்பவர் வங்காளதேசத்தின் அரசியல்வாதி, கல்வியாளர் மற்றும் வங்காள சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

வாழ்க்கை

தொகு

அசீனா முர்சீத், சையத் மன்சூர் முர்சீத் என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு சையத் தன்வீர் முர்சீத் என்ற மகன் இருந்தார். இவர் இவரது கணவரின் இரண்டாவது மனைவி. சையத் மன்சூர் முர்சீத்தின் முதல் மனைவி தாக்கா நவாப் குடும்பத்தைச் சேர்ந்தவர். சையத் தன்வீர் முர்சீத், தாக்கா நவாப் குடும்பத்தைச் சேர்ந்த யாஸ்மீன் முர்சீத்என்பவரை மணந்தார். அசீனா 1937-ல் பிரித்தானிய இந்தியாவின் வங்காள சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] வங்காளத்தின் முதல் பெண் நாடாளுமன்றச் செயலாளர் இவர். இவர் சுயமாகப் படித்தவர். முஸ்லீம் பெண்களுக்கான வங்காளத்தின் முதல் கல்லூரியான லேடி பிரபோர்ன் கல்லூரியின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். இவர் லேடி பிரபோர்ன் கல்லூரியின் ஆட்சிக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். பிரித்தானிய ராஜ்ஜியத்தால் பிரித்தானிய பேரரசின் மிகச் சிறந்த ஆணை இவருக்கு வழங்கப்பட்டது. இவர் கூட்டணிக் கட்சி உறுப்பினராக இருந்தார். வங்காள சட்டப் பேரவையில், பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய முர்சீத், மகளிர் கல்லூரி மற்றும் விடுதிகள் கட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Yasmeen Murshed". nawabbari.com. Nawab Bari. Archived from the original on 1 February 2018. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீனா_முர்சீத்&oldid=3924465" இலிருந்து மீள்விக்கப்பட்டது