அசைலால்

RCH(OOCR)2 என்ற கட்டமைப்பில் உருவாகும் சேர்மம்

அசைலால்கள் (Acylals) என்பவை கரிம வேதியியலில் இடம்பெற்றுள்ள RCH(OOCR)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டின் கட்டமைப்பில் ஒரு வேதி வினைக்குழுவை பகிர்ந்து கொள்கின்ற சேர்மங்களின் குழுவைக் குறிக்கிறது. பொருத்தமான ஒரு வினையூக்கியின் முன்னிலையில் ஆல்டிகைடுகளுடன் அசிட்டிக் நீரிலியைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் அசைலால் உருவாகிறது. சல்போனிக் அமிலம் கலந்த சிர்க்கோனியம் டையாக்சைடு இவ்வினைக்கான ஒரு வினையூக்கியாகும் [1]. தாழ் வெப்பநிலைகளில் ஆல்டிகைடுகளுக்கான பாதுகாப்புக் குழுவாக இது பயன்படுத்தப்படுகிறது. உயர் வெப்பநிலைகளில் அசைலால் மீண்டும் ஆல்டிகைடாக மாற்றமடைகிறது.

அசைலாலின் கட்டமைப்பு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசைலால்&oldid=2748327" இலிருந்து மீள்விக்கப்பட்டது