அசைலைதரசீன்
அமைடை ஒத்த கரிம வேதியியல் சேர்மம்
அசைலைதரசீன் (Acylhydrazine) ஓர் அமைடை ஒத்த கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஆனால் கார்பாக்சிலிக் அமிலத்திலுள்ள -OH பகுதி மட்டும் ஐதரசீனால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டுள்ளது. அசைலைதரசீன்கள் ஒரு வகையான ஐதரசைடுகள் ஆகும்.
வேதித்தொகுப்பு வினைகளில் அசைலைதரசீன்கள் இடைநிலைப் பொருட்களாகும். உதாரணமாக சனிடினிப் (C22H27FN4O2) தொகுப்பு வினையில் 5-புளோரோயிசாட்டின் கலக்கும்போது மெல்ல ஐதரசீன் ஐதரேட்டு உருவாகிறது. நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் 110° செல்சியசு வெப்பநிலையில் இண்டோல் வளைய கட்டமைப்பு உடைகிறது [2]. (அமினோ-5-புளோரோ-பீனைல்)-அசிட்டிக் அமில ஐதரசைடு, 3-வது நிலையில் கீட்டோன் ஒடுக்கத்துடன் உடைந்து, அடுத்தடுத்து வலிமையான அமிலத்தில் பதனிடும்போது இம்மருந்துக்குத் தேவையான 1,3-டையைதரோ-2-ஆக்சோ இண்டோல் கட்டமைப்பு உருவாகிறது.