அமில ஆலைடு
அமில ஏலைடு அல்லது ஏசைல் ஏலைடு, அசைல் ஆலைடு (Acyl Halide) என்பது ஒட்சிஅமிலமொன்றின்[1] -OH கூட்டத்தை எதாவதொரு அலசன் அணுவினால் பிரதியீடு செய்வதன் மூலம் உருவாக்கப்படும் சேதனச் சேர்வையாகும்.[2]
அவ்வமிலம் ஒரு காபொட்சிலிக் அமிலமாயின், அச்சேர்வை ஒரு –COX தொழிற்பாட்டுக் கூட்டத்தைக் கொண்டிருக்கும். இத்தொழிற்பாட்டுக் கூட்டம் ஒரு காபனைல் கூட்டத்தில் ஒற்றைப் பிணைப்பால் இணைக்கப்பட்ட அலசன் அணுவைக் கொண்டிருக்கும். அவ்வாறானதொரு அமில ஏலைட்டின் பொதுச் சூத்திரம் RCOX என எழுதப்படலாம். இங்கு R என்பது ஒரு அல்கைல் கூட்டமாகவும், CO என்பது காபனைல் கூட்டமாகவும், X என்பது குளோரைட் போன்ற ஒரு ஏலைட்டாகவும் இருக்கலாம். அமில ஏலைட்டுக்களில் பெரும்பாலும் உருவாக்கப்படுபவை அமில குளோரைட்டுக்களாகும். எனினும், அசற்றைல் அயடைட்டே அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது. அசெற்றிக் அமில உற்பத்திக்காக, இது வருடாந்தம் பல பில்லியன் கிலோகிராம்கள் உருவாக்கப்படுகின்றன.[3]
இதேபோல், சல்போனிக் அமிலத்தின் ஐதரொட்சில் கூட்டத்தை ஒரு அலசன் அணுவால் பிரதியிடுவதன் மூலம் உரிய சல்போனைல் ஏலைட்டை உருவாக்கலாம். பெரும்பாலும் இதில் குளோரைட் பயன்படுவதால் இவை சல்போனைல் குளோரைட்டு எனவே அழைக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "acyl groups". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "acyl halides". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ Hosea Cheung, Robin S. Tanke, G. Paul Torrence “Acetic Acid” in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a01_045