அச்சங்களும் வெறிகளும்--ஓர் அகரமுதலி

அச்சங்களும் வெறிகளும் --ஓர் அகரமுதலி என்பது ப. அருளி என்பவரால் எழுதப்பட்ட நூல். இந்நூலில் பல வகையான அச்சங்களைக் (Phobia) குறிக்கும் ஆங்கிலச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களைத் தொகுத்து எழுதியுள்ளார். அது போலவே பல வகையான வெறிகளுக்கான(Mania) ஆங்கிலச் சொற்களுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொற்களையும் தொகுத்துள்ளார்.

நூலின் முன்னுரை

தொகு

மொத்தம் 176 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில் முன்னுரை மட்டும் 22 பக்கங்களில் உள்ளது. ஒன்றன் வளர்ச்சிக்கு ஊட்டம் மட்டும் இருந்தால் போதாது; எதிரி தாக்க வரும்போது அவ்வெதிரியை நேர் நின்று தடுத்தும், அல்லது தாக்கியும் வெல்ல வேண்டும் என்றும் அச்சம் என்னும் சொல்லைக் குறிக்க தமிழில் முப்பத்திரண்டு சொற்கள் உள்ளன என்றும் அவற்றின் சொற்பிறப்பியல்புகளையும் விளக்கமாக தம் முன்னுரையில் ஆய்வு செய்து எழுதியுள்ளார். தமிழர்கள் அடிமையுணர்வுடன் வாழ்கிறார்கள்; அதற்கான காரணம் அச்சமே என்றும் கூறுகிறார்.

நூல் அடக்கம்

தொகு

இந்த நூலில் அச்சங்கள் பற்றிய பெயர்கள் மொத்தம் 469 உள்ளன. வெறியின் பெயர்கள் மொத்தம் 102 உள்ளன. ஆங்கில அகர வரிசையில் ஆங்கிலப் பெயர்களுக்கான பொருள்களை ஆங்கிலத்திலும் அவற்றின் தமிழ்ப் பெயர்களுக்கான பொருள்களைத் தமிழிலும் விளக்கம் தந்துள்ளார் ஆசிரியர்.

சில எடுத்துக்காட்டுகள்

தொகு
  • acarophobia ---உண்ணியச்சம்
  • barophobia---ஈர்ப்பச்சம்
  • cremnophobia---குத்துப் பாறையச்சம்
  • diabetophobia----நீரிழிவச்சம்
  • erythrophobia---எரிநிறவச்சம்
  • ambitious mania ----பேரவா வெறி
  • biting mania---கடிப்பு வெறி
  • collecting mania---தொகுப்பு வெறி
  • delusional mania ----மருட்சி வெறி
  • ephemeral mania----நிலையுறுதியிலா வெறி

அடிப்படைச் சான்று

தொகு
  • அச்சங்களும் வெறிகளும் ---ஓர் அகர முதலி
  • Dictionary of Phobias and Manias
  • சொல்லாய்வறிஞர் ப.அருளி, அறிவன் பதிப்பகம், தமிழூர், புதுச்சேரி