அச்சமில்லை (சீனத் திரைப்படம்)

அச்சமில்லை (ஆங்கிலம்: Fearless, சீனம்: Huo Yuanjia) என்பது 2006 ம் ஆண்டு ஹொங்கொங்கில் வெளிவந்த ஒரு சீனத் தற்காப்புக் கலைத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை ரோனி யு இயக்கினார், யெற் லீ முதன்மைப் பாத்திரமாக நடித்தார். இது 19 ம் நூற்றாண்டின் இறுதிலும் 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த கு யுவான் சியா என்ற போர்க்கலை வீரனின் வாழ்க்கைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இவர் சீனாவின் ஒரு புகழ்பெற்ற போர்க்கலை வீரர். இவர் மேற்குநாட்டு, யப்பானிய வீரர்களை போட்டிக்கு அழைத்து வென்று, சீனாவின் தேசியத்தை நிலை நாட்டினார்.