அச்சீசு அகமது கான்

அசாம் மாநில அரசியல்வாதி

அச்சீசு அகமது கான் (Aziz Ahmed Khan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அசாம் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தார். 1978 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவர் அசாம் சட்டமன்றத்தின் கரீம்கஞ்சு தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] அசாம் மாநில அரசியலில் இவர் அகில இந்திய ஐக்கிய சனநாயக முன்னணி கட்சியின் அரசியல்வாதியாகச் செயல்பட்டார். 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, இவர் அகில இந்திய ஐக்கிய சனநாயக முன்னணி கட்சியிலிருந்து விலகி அசாம் கண பரிசத்து கட்சியில் சேர்ந்தார். ஆனால் தேர்தலில் சித்தேக் அகமதுவிடம் தோல்வியடைந்தார்.

அச்சீசு அகமது கான்
Aziz Ahmed Khan
கரீம்கஞ்சு தெற்கு சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2016–2021
முன்னையவர்சித்திக்கு அகமது
பின்னவர்சித்திக்கு அகமது
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1978 (அகவை 45–46)
பரம்பாசா, கரீம்கஞ்சு மாவட்டம்
அரசியல் கட்சிஅகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (2016-2021)
அசாம் கண பரிசத் (2021-முதல்)

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

அச்சீசு அகமது கான் 1978 ஆம் ஆண்டில் அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்சில் உள்ள பாரம்பாசாவில் ஒரு வங்காள முசுலீம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் மோசிர் உதின் அகமது கான் என்பதாகும்.[2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "MEMBERS OF 14th ASSAM LEGISLATIVE ASSEMBLY". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 6 August 2019.
  2. "Aziz Ahmed Khan". Our Neta. பார்க்கப்பட்ட நாள் 12 December 2020.
  3. "Aziz Ahmed Khan". My Neta. பார்க்கப்பட்ட நாள் 12 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அச்சீசு_அகமது_கான்&oldid=3856030" இலிருந்து மீள்விக்கப்பட்டது