அஜாமிளன் (Ajamila (சமசுகிருதம்: अजामिल, IAST: Ajāmila), இந்து தொன்மவியல் மாந்தர்களில் ஒருவர். பாகவத புராணத்தில்[1]ஒருவர் இறக்கும் தருவாயில் ஹரி நாமங்களை ஜெபிப்பதால், எமதூதர்களின் பிடியிலிருந்து காக்கும் மகிமையை அஜாமிளன் எனும் கதை மாந்தர் மூலம் பாகவத புராணம் எடுத்துக் கூறுகிறது.[2] மேலும் ஒருவர் செய்த பாவங்கள் மற்றும் பிறவிச்சுழற்சியிலிருந்து விடுபட்டு வைகுண்டம் அடைவதற்கான திறவுகோலாக உள்ள ஹரி நாமத்தின் மகிமையை அஜாமிளன் கதை மூலம் பாகவத புராணம் எடுத்துக் கூறுகிறது. [3]

அஜாமிளனின் ஆன்மாவை எமதூதர்களின் பிடியிலிருந்து மீட்டெடுக்கும் விஷ்ணு தூதர்கள் (இடது)

தொன்மக் கதை

தொகு

தற்காலத்தில் கன்னோசி என அழைக்கப்படும் கன்யாகுப்ஜம் நகரத்தில் வாழ்ந்த அஜாமிளன் எனும் அந்தணர், பால்வினைத் தொழில் புரியும் பெண்னின் வலையில் சிக்கி, மனைவி மற்றும் குடும்பத்தை மறந்தான். விலைமாதுவுடன் தொடர்ந்து தாம்பத்தியம் நடத்திய அஜாமிளன், வறுமை காரணமாக திருட்டுகளில் ஈடுபட்டு பொருள் சம்பாதித்தான். விலைமாது மூலம் அஜாமிளனுக்கு பத்து குழந்தைகள் பிறந்தனர். கடைசி குழந்தைக்கு நாராயணன் எனப்பெயரிட்டான்.

எண்பத்தெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜாமிளன் மரணப் படுக்கையில் இருந்த போது, எம தூதர்களைக் கண்டு பயந்த அஜாமிளன் தன் மகன் நாராயணனின் பெயரைக் கூவிக்கூவி அழைத்தான்.. விஷ்ணுவின் திருநாமத்தைக் கேட்டதும், விஷ்ணு தூதர்கள் அஜாமிளனை எமதூதர்களின் பிடியில் இருந்து மீட்கத் தோன்றினர். விஷ்ணு தூதர்கள் மற்றும் யம தூதர்கள் அஜாமிளனை எம தேவன் முன்பு கொண்டு நிறுத்தி விசாரிக்கப்பட்டார்.[4]

அவ்வமயம் எம தேவனிடம், விஷ்ணு தூதர்கள், சாத்திரங்கள் கூறியவாறு, ஹரியின் பெயரை உச்சரிப்பது அல்லது நாம ஜெபம் செய்தல் அல்லது பாராயணம் செய்வதால் ஒருவன் அனைத்துப் பாவங்களிலிருந்து விடுபட்டு வைகுண்டம் அடைகிறான் என எடுத்துக் கூறினார்கள். இவ்வகையாக தனது கடமைகளை புறக்கணித்து, பாவ வாழ்க்கை நடத்திய அந்தணர் அஜாமிளன் வைகுண்டம் அடைய முடிந்தது.[5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Srimad Bhagavatam Canto 6". vedabase.net. Archived from the original on 2021-08-16. பார்க்கப்பட்ட நாள் 2019-11-28.
  2. அஜாமிளன்
  3. "Taraka Mantra" (in en-IN). The Hindu. 2016-05-04. https://www.thehindu.com/features/friday-review/religion/faith-taraka-mantra/article8557118.ece. 
  4. www.wisdomlib.org (2022-08-19). "The Story of Ajāmila [Chapter 1]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.
  5. www.wisdomlib.org (2022-08-19). "Exposition of the Bhāgavata Dharma [Chapter 2]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-06.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜாமிளன்&oldid=4133931" இலிருந்து மீள்விக்கப்பட்டது