அஞ்சனா (நடிகை)

இந்திய நடிகை

அஞ்சனா (Anjana) கன்னடத் திரைப்படங்களில் தனது பாத்திரங்களுக்காக அறியப்படும் இந்திய நடிகையாவார். 1990களின் முற்பகுதியில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருந்த இவர், 20 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

அஞ்சனா
Anjana
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1988-1997

தொழில் வாழ்க்கை

தொகு

அஞ்சனா சபரிமலே சுவாமி அய்யப்பன் (1990) திரைப்படத்தில் அறிமுகமானார். இவரது திருப்புமுனை திரைப்படம் அஜகஜந்தரா (1991). [2] ஒண்டு சினிமா கதே (1992) கடமாரி ஹென்னு கிலாடி கண்டு (1992) நிஷ்கர்ஷா (1993) ஆதங்கா (1993) ஜானா (1994) போன்ற வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்தார். இவரது மற்ற குறிப்பிடத்தக்க நடிப்புகளில் போலிசெனா கென்தி (1991) மேகா மந்தரா (1992) ரோசகரா (1992-) லூட்டி கேங் (1994), பங்கரதா கலசா (1995) ஆகியவையாகும்.[3] 1997 இல் திரைப்படங்களிலிருந்து விலகிய இவர், கடைசியாக எனூண்ட்ரே (1997) திரைப்படத்தில் தீரேந்திர கோபாலின் பேத்தியாக நடித்தார். மும்பையில் வசித்து வருகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Desk, HT Kannada. "Sandalwood News: ನೆನಪಿದ್ದಾರಾ ಅಜಗಜಾಂತರ ನಟಿ ಅಂಜನಾ; ಚಿತ್ರರಂಗದಲ್ಲಿ ಉತ್ತಮ ಅವಕಾಶಗಳಿದ್ದರೂ ಇದ್ದಕ್ಕಿದ್ದಂತೆ ಸಿನಿಮಾ ಬಿಟ್ಟಿದ್ದು ಏಕೆ?". Kannada Hindustan Times. Archived from the original on 8 August 2023. பார்க்கப்பட்ட நாள் 7 August 2023.
  2. "ಕಾಶಿನಾಥ್‌ ಟಾಪ್‌ 5 ಚಿತ್ರಗಳು". Vijay Karnataka. Archived from the original on 1 August 2023. பார்க்கப்பட்ட நாள் 1 August 2023.
  3. "ನೆನಪಿದ್ದರಾ ಅಜಗಜಾಂತರ ಚಿತ್ರದ ನಟಿ ಅಂಜನಾ??ಈಗ ಹೇಗಿದ್ದಾರೆ ಮತ್ತು ಎಲ್ಲಿದ್ದಾರ ಗೊತ್ತಾ? - Hindustan Prime" (in அமெரிக்க ஆங்கிலம்). 26 February 2022. Archived from the original on 24 July 2023. பார்க்கப்பட்ட நாள் 24 July 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சனா_(நடிகை)&oldid=4007816" இலிருந்து மீள்விக்கப்பட்டது