அஞ்சா பார்சன்
அஞ்சா சோபியா டெஸ் பார்சன் (Anja Pärson) (பிறப்பு ஏப்ரல் 25,1981) சுவீடன் நாட்டைச் சேர்ந்த மலைச்சரிவு பனிச்சறுக்கு விளையாட்டு வீராங்கனை. இவர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர். இவர் எஃப். ஐ. எஸ். உலக மலைச்சரிவு பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று ஏழு முறை தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும் உலகக் கோப்பை மலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் இரண்டு முறை வெற்றி பெற்றார். இவர் மொத்தமாக 42 உலகக் கோப்பை பந்தயங்களில் வென்றுள்ளார்."[1]
வாழ்க்கைக் குறிப்பு
தொகுபார்சன் சுவீடன் நாட்டிலுள்ள 'டாமபை' என்னும் ஊரில் பிறந்தார். இவர் அங்குள்ள சமி என்ற இனத்தைச் சேர்ந்தவர். இவர் தனது சகோதரி ஃப்ரிடா மூலம் இவ் விளையாட்டிற்கு அறிமுகமானார். தற்போது இவருடைய சகோதரி இவர்களின் தந்தை ஆன்டெர்ஸ் மூலமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். 1988ம் ஆண்டு மார்ச்சு மாதம் 15ம் தேதி நடைபெற்ற மலைச்சறுக்கு பனிச்சறுக்கு உலககோப்பை பந்தயம் தான் பார்சன் பங்குபெற்ற முதல் போட்டி ஆகும். இதன் இறுதிச் சுற்று சுவிட்சர்லாந்திலுள்ள கிரான்ஸ்-மன்டனா என்னும் இடத்தில் நடைபெற்றது. இது பெரிய பனிச்சறுக்கு போட்டி எனப்படுகிறது. இதற்கு நியூ ஜூனியர் வோர்ல்ட் சாம்பியன்ஷிப் மூலம் தகுதி பெற்று இப் பந்தயத்தில் கடைசி இடமான 25வது இடத்தைப் பிடித்தார்.
இவர் தனது 17ம் வயதில் கலிஃபோர்னியாவிலுள்ள மம்மூத் மலையில் நடைபெற்ற (1999 ஆல்பைன் பனிச்சறுக்கு உலகக்கோப்பை / திசம்பர் 1998) போட்டியில் முதல் தடவையாக வெற்றி பெற்றார். ஆஸ்திரியா நாட்டில் உள்ள செயின்ட் ஆன்டன் என்னும் இடத்தில் நடைபெற்ற மலைச்சறுக்கு பனிச்சறுக்கு உலகக்கோப்பை (2001) விளையாட்டில் பங்குபெற்று முதல் தங்கப்பதக்கத்தை வென்றார். இவர் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை 2002ம் வருடம் நடைபெற்ற போட்டிகளில் வென்றுள்ளார். மேலும் தங்கம் மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை 2006ம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வென்றார்.
பார்சன், 2004 மற்றும் 2005ம் ஆண்டு நடபெற்ற ஆல்பைன் பனிச்சறுக்கு உலகக்கோப்பை போட்டியில் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றார். 2005ம் ஆண்டு நடைபெற்ற போட்டி மிக கடினமாக இருந்தது. இவருடன் போட்டியிட்ட ஜெனிகா கோஸ்டெலிக்கை 3 புள்ளிகள் வித்தியாசத்தில் அந்த வெற்றி வாய்ப்பை அடைந்தார். இத்தாலியிலுள்ள செசனா சான் சிகாரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னால் நடைபெற்ற போட்டிகளில் தனது முதல் "சூப்பர் - ஜி" பட்டத்தையும், டெளவுன்ஹில் பனிச்சறுக்கு போட்டியிலும் வெற்றி பெற்றார். இவர் மொத்தமாக 42 உலகக் கோப்பை போட்டிகளில் ஐந்து பிரிவுகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ana parson". ski.com.