அஞ்ஞவதைப் பரணி

அஞ்ஞவதைப் பரணி 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்.
இது அஞ்ஞவதைப் பரணி எனவும், ஞானபரணி எனவும், தத்துவக் காட்சி எனவும் கூறப்படும்.

இந்த நூலைப் பற்றிய செய்தியை மறைஞான தேசிகர் [1] என்பவர் தாம் எழுதிய உரைநூலில் [2] குறிப்பிடுகிறார்.
ஞானம் என்பது மெய்யறிவு.
அஞ்ஞானம் என்பது பொய்யறிவு.
பொய்யறிவைப் போரிட்டு வதம் செய்வதை இந்த நூல் பரணி நூலுக்கு உரிய இலக்கண அமைதியோடு பாடுகிறது.
இதில் 493 தாழிசைகள் உள்ளன.
இந்த நூலின் பாட்டுடைத் தலைவர் சொரூபானந்தர் [3],
அவருக்கு எதிரி அஞ்சானம்.
அஞ்சானம் ‘அஞ்ஞன்’ என்னும் பகைவனாக இதில் உருவகம் செய்யப்பட்டுள்ளான்.
இதில் வள்ளைப்பாட்டு என்னும் பாடல்-உறுப்பு வருகிறது.
அது ‘கம்மலோ கம்முலக் காய்’ (கம்மலோ கம்மு உலக்காய்) என முடிகிறது.
இது ஒருவகை வள்ளைப்பாட்டு இது ஒரு சாத்திர நூல்.
16-ஆம் சூற்றாண்டில் வாழ்ந்த மறைஞான தேசிகர் தாம் எழுதிய சித்தியார் உரையில் எடுத்துக்காட்டியுள்ளார்.

கருவிநூல்தொகு

அடிக்குறிப்புதொகு

  1. 15ஆம் நூற்றாண்டு
  2. சித்தியார் உரை
  3. உருவம் அறிதுயில் கொள்ளும் ஒருவர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்ஞவதைப்_பரணி&oldid=1882224" இருந்து மீள்விக்கப்பட்டது