அடங்காப்பற்று (வன்னி) வரலாறு (நூல்)
அடங்காப்பற்று (வன்னி) வரலாறு என்னும் நூல் 2004 ஆம் ஆண்டில் இருந்து 2010 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்ட ஒரு வரலாற்று நூல். இலங்கைத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசத்துள் அடங்கும் அடங்காப்பற்று என அழைக்கப்படும் வன்னிப் பகுதியின் வரலாறு குறித்த தகவல்களை இந்நூல் தொகுத்துத் தருகின்றது. இதை ஒரு இதழியலாளரும், எழுத்தாளருமான அருணா செல்லத்துரை எழுதியுள்ளார்.
அடங்காப்பற்று (வன்னி) வரலாறு | |
---|---|
நூல் பெயர்: | அடங்காப்பற்று (வன்னி) வரலாறு |
ஆசிரியர்(கள்): | அருணா செல்லத்துரை |
வகை: | வரலாறு |
துறை: | வன்னியின் வரலாறு |
காலம்: | கி.மு. - கி.பி. 1948 |
இடம்: | கொழும்பு |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 140 + 173 + 151 + 151 + 158 |
பதிப்பகர்: | அருணா வெளியீட்டகம் |
பதிப்பு: | 2004. 2005, 2006, 2007, 2010 |
நோக்கம்
தொகுஅடங்காப்பற்று பற்றிய வரலாறுகளைப் பதிந்து வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வரலாற்றுப் பதிவுகளை இந்த நூலினூடாகத் தொகுப்பதே நூலாசிரியரின் நோக்கம் என்பது அவர் இந்நூலின் முதலாம் பாகத்துக்கான முன்னுரையின் குறிப்பிட்டிருப்பதில் இருந்து தெரிகிறது. அத்துடன், கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தொடங்கும் இலங்கைத் தமிழர்களின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளவும், மேலும் ஆய்வுகளைச் செய்து தமிழர்களின் தாயக பூமிக்கான சான்றுகளைப் பெற்றுக்கொள்ளவும் உதவுவதை இந்நூல் நோக்கமாகக் கொண்டிருப்பதையும் அறிய முடிகிறது.[1]
பாகங்கள்
தொகுஐந்து பாகங்களைக்கொண்ட இந்த நூலின் ஒவ்வொரு பாகமும் தனித்தனியாக 2004 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்டன. இந்த ஐந்து பாகங்களுடைய விபரங்களை அவை வெளியிடப்பட்ட ஆண்டுகளுடன் கீழே கணலாம்.
- அடங்காப்பற்று (வன்னி) வரலாறு பாகம் 1 - கி.மு. - கி.பி. - 2004
- அடங்காப்பற்று (வன்னி) வரலாறு பாகம் 2 - பண்டாரவன்னியன் (கி.பி. 1750 - 1811) - 2006
- அடங்காப்பற்று (வன்னி) வரலாறு பாகம் 3 - சுதேசத் தலைமைகள் (கி.பி. 1750 - 1895) - 2005
- அடங்காப்பற்று (வன்னி) வரலாறு பாகம் 4 - மாப்பாண வன்னியர் + மடப்பளி வன்னியர் (கி.பி. 1625 - 1800) - 2007
- அடங்காப்பற்று (வன்னி) வரலாறு பாகம் 5 - அடங்காப்பற்று முதலிமார் (கிபி. 1795 - 1948) - 2010
குறிப்புகள்
தொகு- ↑ செல்லத்துரை, அருணா., அடங்காப்பற்று (வன்னி) வரலாறு பாகம் 1, 2004. பக். ix.