அடிநாச் சுரப்பிகள்

(அடிநாச் சுரப்பிகல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அடிநாச் சுரப்பிகள் அல்லது அடிநாச் சதை என்பது மனித உடலின் மிகப்பெரிய நிணநீர்ச் சுரப்பிகளாகும். ஆங்கிலத்தில் இதனை டான்சில் (Tonsil) என அழைப்பர். அடிநாச் சதை தொண்டையில் உணவுக்குழலுக்கு இருபுறமும் அமைந்துள்ளன. இவை முட்டை வடிவில் உள்ளன. தசையால் ஆனவை. இவை ஒரு வகையான நிணசீர் திசுவைச் சேர்ந்தவை. இவை வாயின் உட்புறத்தில் அமைந்துள்ளன. இதன் மூலம் மூசுக்குழல், உணவுக்குழல் இன்னும் அடுத்துள்ள பொந்துகளையும் கிருமிகள்,பாக்டீரியா மற்றும் பிற வேதிப்போருட்களின் தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. எனினும் சில சமயங்களில் அடிநாச்சதை அழற்சி அடைவதுமுண்டு. அப்போது அப்பகுதி நுண்கிருமிகள் வாழுமிடமாக மாறிவிட ஏதுவாகிறது. இதன் மூலம் இதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிப்படைய நேர்கிறது. அத்தகைய தருணங்களில் இவ்வழற்சியைப் போக்க அறுவை மூலம் அடி நாச்சதைகள் அகற்றப்படுகின்றன. இந்த அறுவைச் சிகிச்சியால் பாதிப்பு ஏதும் ஏற்படுவதில்லை.[1] பெரியவர்களின் தொண்டைப் பகுதியில் இவை படிப்படியாக மறைந்து விடலாம். தொண்டைப் பகுதியின் உள்சுவற்றில் மூன்று வகை டான்ஸில்கள் உண்டு. இவற்றில் மேல் அண்ண டான்சிள்களே, வழக்கத்தில் டான்ஸில்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன. இவை உள் நாசியறை தொண்டைப்பகுதியில் இணையும் இடத்திலுள்ளன. நாக்கின் அடிப்பரப்பில் உள்ள நிணநீர்ச் சுரப்பிகள் நாக்குப்புற டான்ஸில்கள் எனப்படும்.

குறிப்புகள்

தொகு

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிநாச்_சுரப்பிகள்&oldid=3049487" இலிருந்து மீள்விக்கப்பட்டது