அடி குழாய் இறைப்பி

அடிகுழாய் இறைப்பி (hand pump) என்பது திரவங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கைமுறையாக நகர்த்துவதற்குப் பயன்படும் ஓர் இயந்திரம் ஆகும். இதில் கைப்பிடியை மேல் நோக்கி தூக்கும் போது உந்து தண்டு கீழ்நோக்கி நகரும். அப்போது உந்து தண்டோடு பொருத்தப்பட்டிருக்கும் அடைப்பான் திறந்து கொள்ளும். கீழ்ப் பகுதியில் இருக்கும் அடைப்பான் மூடியிருக்கும். கைப்பிடி கீழ்நோக்கி நகரும்போது உந்து தண்டோடு பொருத்தப்பட்டிருக்கும் அடைப்பான் மூடிக்கொள்ளும். கீழ்ப் பகுதியில் இருக்கும் அடைப்பான் திறந்து கொள்ளும். இதனால் தண்ணீர் மேலேறுகிறது.[1]

அடி குழாய் இறைப்பியின் நீள்வெட்டுத் தோற்றம்
 அடி குழாய் இறைப்பி செயல்படும் விதம் இங்கு காண்பிக்கப்பட்டுள்ளது.

வரலாறு

தொகு
 
பிஸ்டன் பம்பின் முதல் ஐரோப்பிய சித்தரிப்பு, டக்கோலா, c.1450.[2]

முந்தைய நாட்களில் உலகளவில் ஒரு வகையான கையால் இயங்கும் நீர் அடி குழாய் அல்லது 'பிட்சர் குழாய்' பொதுவாக நீர் விநியோகத்திற்காக சமூக நீர்க் கிணறுகளில் நிறுவப்பட்டது. அன்றைய தொழில்நுட்பத்தின் உச்சமாகக் கருதப்பட்ட இந்த பம்புகள், இன்றும் பல கிராமங்களில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Handpumps". WaterAid. பார்க்கப்பட்ட நாள் 2010-11-01.
  2. Hill, Donald Routledge (1996). A History of Engineering in Classical and Medieval Times. London: Routledge. p. 143. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-15291-4.
  3. "The Role of Handpumps in Rural Water Supply: A Case Study from India" by S.K. Jain and R.K. Jain.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடி_குழாய்_இறைப்பி&oldid=4085546" இலிருந்து மீள்விக்கப்பட்டது