அட்சின்சன் வகைப்பாடு
அட்சின்சன் வகைப்பாடு (Hutchinson system) என்பது ஆங்கிலேயத் தாவரவியலாளர் ஜான் அட்சின்சன் என்பவர் தொகுத்த தாவர வகைப்பாட்டியலின் முறைமை ஆகும். இதனை அவர் "பூக்கும் தாவரங்களின் குடும்பங்கள்" என்ற தலைப்பில் பூக்கும் தாவரங்களை வகைப்படுத்தி 1926 ஆம் ஆண்டுக்கும் 1934 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் முதல் பதிப்பாக வெளியிட்டார். இதன் இரண்டாவது பதிப்பு 1959 ஆண்டும், மூன்றாவது பதிப்பு 1973 ஆண்டும் வெளியிடப்பட்டது.[1][2][3][4] இவரது வகைப்பாடு பெஸ்ஸே மற்றும் பெந்தம்-ஹூக்கர் வகைப்பாட்டினை ஒத்தது. 1959இல் தந்த தனது இரண்டாவது வகைப்பாட்டின் அரிஸ்டாட்டிலின் வளரியல்புக் கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். பொதுவாக பேரினங்கள் மற்றும் சிற்றினங்களின் மட்டத்தில் மட்டுமே உடலப் பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வகைப்பாட்டியல் விதிமுறையில் கையாளப்படும் வழக்கமாகும். ஆனால் ஹட்சின்சன் கட்டைத் தன்மையுள்ள மர வகைகளை, சதைப் பற்றுடைய சிறு செடிகள் அடங்கிய தொகுப்பிலிருந்து வேறுபட்ட தொகுப்பாகக் கருதி அதனடிப்படையில் இருவித்திலைத் தாவரங்களை வகைப்படுத்தும்போது வளரியல்பை அடிப்படையாகக் கொண்டு அவற்றை லிக்னோசே மற்றும் ஹெர்பேசியே என்ற இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்தார். அதாவது, கட்டைத் தன்மை உடைய மற்றும் மரத்தாவரங்களை லிக்னோசே என்ற பிரிவிலும் அடிப்படையில் சிறு செடிகளாக உள்ள தாவரங்களை ஹெர்பேசியே என்ற பிரிவிலும் வைத்து வகைப்படுத்தியுள்ளார்.
- மூடுவிதைத் தாவரம் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்)
- இருவித்திலைத் தாவரங்கள்
- ஒருவித்திலைத் தாவரங்கள்
- இருவித்திலைத் தாவரங்கள்
- லிக்னோசே
- ஹெர்பேசியே
- ஒருவித்திலைத் தாவரங்கள்
- காலிசிஃபெரே
- கொரல்லி ஃபெரே
- குளுமி ஃபெரே
- நிறைகள்;
- ஒருவித்திலைத் தாவரங்கள் (மானோ காட்டுகள்). இருவித்திலை தாவரங்களைவிட (டைகாட்டுகள்) முன்னேறியவை எனக் கருதி இரண்டாவது துணை ஃபைலமாக வைத்திருப்பது போற்றதற்குரியது
- ஒருவித்திலைத் தாவரங்களை வகைப்படுத்துவதில் கையாளப்பட்டிருக்கும் முறை மிக பாராட்டத்தக்கது.
- குறைகள்
- இருவித்திலைத் தாவரங்களில் உள்ள சில குடும்பங்கள் வைக்கப்பட்டிருப்பதை சரியான விளங்கள் அளிக்கப்படாதிருப்பது.
- எல்லா நிலைகளிலும் புற அமைப்புப் பண்பிற்கே முக்கியத்துவம் கொடுத்து வகைப்பாட்டினை அமைத்திருப்பது ஒரு மிகப் பெரிய குறையாகும்.