அட்சின்சோனைட்டு
சல்போவுப்புக் கனிமம்
அட்சின்சோனைட்டு (Hutchinsonite) என்பது (Tl,Pb)2As5S9 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாலியம், ஆர்சனிக், ஈயம் ஆகிய தனிமங்களின் சல்போவுப்புக் கனிமம் என்றும் ஓர் அரிய நீர்வெப்பக்கனிமம் என்றும் இதை வகைப்படுத்துகிறார்கள்.
அட்சின்சோனைட்டு Hutchinsonite | |
---|---|
பெரு நாட்டின் கியுருவில்கா சுரங்கத்தில் கிடைத்த அட்சின்சோனைட்டு. அளவு: 4.5×4.4×2.2 செ.மீ | |
பொதுவானாவை | |
வகை | சல்போவுப்பு கனிமம் |
வேதி வாய்பாடு | (Tl,Pb)2As5S9 |
இனங்காணல் | |
நிறம் | சிவப்பு, இளஞ்சிவப்பு, கருப்பு |
படிக இயல்பு | ஊசி வடிவ படிகங்கள் |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
பிளப்பு | {100} தெளிவு |
முறிவு | சிறிய சங்குருவ துண்டுகளாக உடையும் தன்மை கொண்டது |
மோவின் அளவுகோல் வலிமை | 1.5–2 |
மிளிர்வு | துணை உலோகம் |
கீற்றுவண்ணம் | சிவப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் மற்றும் ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 4.6 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
ஒளிவிலகல் எண் | nα = 3.078 nβ = 3.176 nγ = 3.188; 2V = 37° |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.110 |
மேற்கோள்கள் | [1][2][3] |
1904 ஆம் ஆண்டு முதன்முதலில் சுவிட்சர்லாந்து நாட்டின் பின்னெண்டால் பள்ளத்தாக்கில் இத்தனிமம் கண்டறியப்பட்டது. 1866 முதல் 1937 வரையிலான காலப்பகுதியில் வாழ்ந்த கேம்பிரிட்சை சேர்ந்த கனிமவியலாளர் ஆர்தர் அட்சின்சன் பெயரே கனிமத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அட்சின்சோனைட்டு கனிமத்தை Hut[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Handbook of Mineralogy
- ↑ Hutchinsonite at Mindat.org
- ↑ Hutchinsonite at Webmineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
மேலும் படிக்க
தொகு- Prior, G. T. (1905). "A New Thallium Mineral". Nature 71 (1849): 534. doi:10.1038/071534b0. Bibcode: 1905Natur..71Q.534P.