அட்டலங்காய் புட்டலங்காய்

அட்டலங்காய் புட்டலங்காய் என்னும் விளையாட்டு பேச முயலும் குழந்தையிடம் தாய்மார் பேசி மகிழ்விக்கும் விளையாட்டு.

கால் தொடல்

பல குழந்தைகளைக் கால்களை நீட்டிக்கொண்டு வரிசையாக உட்கார வைத்து அவர்களின் கால்களை ஒவ்வொன்றாகத் தொட்டுத் தாய்மார் பாட்டுப்பாடுவர்.

அட்டலங்காய் புட்டலங்காய் … (பலமுறை சொல்லப்படும்)
உப்புக்கண்டம் போட்டு
உரிமேலே வை
எந்தப் பூனை தின்றது
இந்தப்பூனை தின்றது

கடைசியில் தொடும் காலைச் செல்லமாகக் கிள்ளுவர்.

மேலும் பார்க்க

தொகு

கருவிநூல்

தொகு
  • ஞா. தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் சென்னை வெளியீடு, 1954