அட்டு நகரம்

அட்டு நகரம் (Addu City, உள்ளூர் நிர்வாகப் பெயர் சீனு பவளத்தீவு (Seenu Atoll) மாலத்தீவு நாட்டின் இரு நகரங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தென்கோடியில் அமைந்துள்ள அட்டு பவளத்தீவின் மனிதர் வசிக்கும் தீவுகளில் அமைந்துள்ளது. அட்டு நகரத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளன. அவை:ஹிதாதூ, மரதூ-ஃபெய்தூ, மரதூ, ஹுல்ஹுதூ, மற்றும் மீதூ. இந்தப் பிரிவுகள் இயற்கையான தீவுகளால் அமைந்தாலும் இவை நன்கு இணைக்கப்பட்டுள்ளன. இவை தவிர அட்டு பவளத்தீவில் மனிதர் இல்லாத தீவுகளும் உள்ளன.[1]

நவம்பர் 10-11, 2011 நாட்களில் சார்க் நாடுகளின் உச்சி மாநாடு இங்கு நடைபெற்றது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Addu Atoll to become 'city island' – Minivan News – Archive" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-07-19.
  2. https://mea.gov.in/bilateral-documents.htm?dtl/16124/Seventeenth+SAARC+Summit+Addu+Declaration++Building+Bridges
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டு_நகரம்&oldid=3522218" இலிருந்து மீள்விக்கப்பட்டது