அட்லசு (தொன்மவியல்)
அட்லசு என்பவர் கிரேக்கத் தொன்மவியல் கூறப்படும் ஓர் "புராதனக் கடவுள்" (டைட்டன்). இவரது சகோதரர் புரோமித்தியூசு ஆவார். டைட்டானோமாச்சி போரில் டைட்டன்களுக்கு ஆதரவாகப் போராடியதால் அட்லசைத் தண்டிக்கும் பொருட்டு விண்ணுலகைத் தாங்கி நிற்கும் படி கிரேக்கர்களின் தலைமைக் கடவுள் சியுசு பணித்தார்.[1]
அட்லசு | |
---|---|
அட்லசு | |
இடம் | பூமியின் மேற்கு ஓரம் |
துணை | பிலைய்யோன், எசுபெரியசு |
பெற்றோர்கள் | இயபெடசு மற்றும் ஆசியா அல்லது கிலைமென் |
குழந்தைகள் | எசுபெரிட்சு, ஐயேட்சு, ஐயாசு, பிலையட்சு, கலிப்சோ, டையோன் மற்றும் மேரா |