அணஸ்வரா ராஜன்
அணஸ்வரா ராஜன் (8 செப்டம்பர் 2002) தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பணியாற்றி பெயர்பெற்ற ஓர் இந்திய நடிகை ஆவார் . இவர் நடித்த முதல் திரைப்படம் உதாஹரணம் சுஜாதா ஆகும். இவர் க்ளோப் என்ற மலையாள குறும்படம் மூலம் அறிமுகமானார் .இவர் நடித்து வணிக ரீதியாக மிக பெரிய வெற்றிபெற்ற திரைப்படங்கள் , தண்ணீர் மத்தன் தினங்கள் (2019) மற்றும் ஆத்யராத்ரி (2019) மூலம் மேலும் புகழ்பெற்றார். இவர் இவருடன் சக நடிகர் மாத்யூ தாமஸ் உடன் இணைந்து 22வது ஆசியாநெட் திரைப்பட விருதுகள் 2020ல் தண்ணீர் மத்தன் தினங்கள் (2019) என்ற திரைப்படத்தில் கீர்த்தி மற்றும் ஜெய்சன் என்ற கதாபாத்திரங்களில் நடித்ததற்காக சிறந்த நட்சத்திர ஜோடி விருதை பெற்றனர்.
ஆரம்ப வாழ்க்கை
தொகுஅணஸ்வரா ராஜன் 8 செப்டம்பர் 2002ல் ராஜன் பையதாகத் மற்றும் உஷா தம்பதியினருக்கு கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் மாவட்டத்தில் பிறந்தார். தன்னுடைய 10ஆம் வகுப்பு கல்வியை மேரி உயர்நிலை பள்ளியில் படித்து முடித்து , தற்பொழுது பையனூரிலுள்ள அரசு உயர்நிலை பள்ளியில் படிக்கிறார் .
திரைப்பயணம்
தொகுஅனஸ்வரா 2017ல் வெளியான உதாஹரணம் சுஜாதா படத்தில் மஞ்சு வாரியரின் எதிர்த்தெழும் மகள் ஆதிரா கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார். மேலும் சில படங்களில் சிறிய வேடங்களில் தோன்றிய பின்னர் 2019ல் வெளியான தண்ணீர் மத்தன் தினங்கள் என்ற திரைப்படத்தில் முதன் முதலாக கதாநாயகியாக நடித்து வெற்றிபெற்றார். இவர் திரிஷா கதாநாயகியாக நடித்து 2020ல் வெளியாகவுள்ள ராங்கி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது கால்தடத்தை பாதிக்கவுள்ளார் . அவரது வரவிருக்கும் திட்டங்களில் ‘வாங்கு’ மற்றும் ‘சூப்பர் சரண்யா’ ஆகியவை அடங்கும். ‘வாங்கு’ மார்ச் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டது, ஆனால் கோவிட் -19 காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
திரைப்படவியல்
தொகுதிரைப்படங்கள்
தொகுவருடம் | தலைப்பு | வேடம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2017 | உதாஹரணம் சுஜாதா | ஆதிரா கிருஷ்ணன் | மலையாளம் | முதல் திரைப்படம் |
2019 | எவிடே | சஹானா | மலையாளம் | |
2019 | தண்ணீர் மத்தன் தினங்கள் | கீர்த்தி | மலையாளம் | கதாநாயகியாக முதல் படம் |
2019 | மை சாண்டா | மூத்த இஷா | மலையாளம் | கேமியோ |
2019 | ஆதியராத்ரி | ஷாலினி | மலையாளம் | |
2020 | வாங்கு | ரஸியா | மலையாளம் | தயாரிப்பிற்கு பின் |
2020 | ராங்கி | சுஷ்மிதா | தமிழ் | படப்பிடிப்பு |
2020 | அவியல் | மலையாளம் | தயாரிப்பிற்கு பின் | |
2020 | சூப்பர் சரண்யா | சரண்யா | மலையாளம் | அறிவிக்கப்பட்டது |
சின்னத்திரை
தொகுவருடம் | நிகழ்ச்சி | வேடம் |
---|---|---|
2019 | டி5 ஜூனியர் | விருந்தினர் |
குறும்படங்கள்
தொகு- 2015 - க்ளோப் (மலையாளம்)
விருதுகள்
தொகு- 22வது ஆசியாநெட் திரைப்பட விருதுகள் 2020 - சிறந்த நட்சத்திர ஜோடி (2019)
- பிலௌர்ஸ் (தொலைக்காட்சி நிறுவனம்) - பிலௌர்ஸ் இந்தியன் திரைப்பட விருதுகள் 2018 - உதாஹரணம் சுஜாதா (2017) விற்காக சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது
மேற்கோள்
தொகு1.https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/anaswara-rajan-i-havent-enjoyed-any-movie-set-like-thanneermathan-dinangal/articleshow/70304583.cms. தி டைம்ஸ் ஆப் இந்தியா
3.https://www.indiaabroad.com/anaswara-rajan-to-make-tamil-debut-with-raangi/article_1738bb6a-17e0-5620-bc26-09630c105133.html இந்தியஅப்ரோட்.காம்
4.https://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/adyarathri-team-have-a-blast-on-d5-junior/articleshow/71376250.cms தி டைம்ஸ் ஆப் இந்தியா
5.https://www.vinodadarshan.com/2018/05/flowers-indian-film-awards-2018-winners.html
6. Anaswara upcoming projects include ‘Vaanku’ and ‘Super Saranya’. (English).