அணியியல் என்பது ஒரு இயற்றமிழ் இலக்கண நூல் ஆகும்.
இது ஒரு தனி நூலாகவோ, அல்லது ஒரு நூலின் பகுதியாகவோ இருக்கவேண்டும்.

அணியியல் என்னும் பெயரைச் சொல்லி அதிலிருந்து இரண்டு நூறுப்பாக்களை அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

அடியார்க்கு நல்லார் மேற்கோள்
1
உரையும் பாட்டும் விரவியும் வருமே [1]
2
உதாரம் என்பது ஓதிய செய்யுளில்
குறிப்பின் ஒருபொருள் நெறிப்படத் தோன்றல் [2]
தண்டியலங்காரம் கையாளல்

மேலே கண்ட இரு நூற்பாக்களும் தண்டியலங்காரத்தில் காணப்படுகின்றன. [3]

12ஆம் நூற்றாண்டு நூலான தண்டியலங்காரம் அடியார்க்கு நல்லார் காலத்துக்கு முந்தியது. அந்நூல் எடுத்தாண்டுள்ள அணியியல் நூற்பாக்கள் தண்டியலங்காரத்துக்கும் முந்தியவை.

பிற குறிப்பு

தண்டியலகார உரை, யாப்பருங்கல விருத்தியுரை அகிய நூல்களும் ‘அணியியல்’ நூலைக் குறிப்பிடுகின்றன.

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005

அடிக்குறிப்பு தொகு

  1. சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை மேற்கோள்
  2. சிலப்பதிகாரம் மனையறம்படுத்த காதை அடி 26-27
  3. தண்டியலங்காரம் பொதுவணியியல் நூற்பா 11, 21
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணியியல்&oldid=1764244" இலிருந்து மீள்விக்கப்பட்டது