அணுக்கரு மருத்துவம்

அணுக்கரு மருத்துவம் (Nuclear medicine) என்பது காப்பிடப்படாத கதிர் ஐசோடோப்புக்களை நேரடியாக மருந்தாகவும் நோய் அறிதலிலும் பயன்படுத்தும் மருத்துவப் பிரிவாகும். அயோடின் 131, தைராய்டு சுரப்பியின் நிலையினைக் காணவும் அதில் புற்று நோயிருந்தால் அதன் மருத்துவத்திலும் பயன்படுகின்றது. அதுபோல் குருதி செவ்வணு புற்றுநோய்க்கு கதிரியக்கமுடைய பாசுபரசு 32 பயன் படுத்தப்படுகிறது. இதுபோல் பல ஐசோடோப்புக்கள் உள்ளன. மாறாக தொலைகதிர் மருத்துவத்திலும் (Teletherapy) அண்மைகதிர் மருத்துவத்திலும் (Brachytherapy) அவைகள் காப்பிடப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

  1. What is nucleology?
  2. "Nuclear Medicine". Archived from the original on 27 February 2015. பார்க்கப்பட்ட நாள் 20 August 2015.
  3. scintigraphy Citing: Dorland's Medical Dictionary for Health Consumers, 2007 by Saunders; Saunders Comprehensive Veterinary Dictionary, 3 ed. 2007; McGraw-Hill Concise Dictionary of Modern Medicine, 2002 by The McGraw-Hill Companies
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணுக்கரு_மருத்துவம்&oldid=3752197" இலிருந்து மீள்விக்கப்பட்டது