அண்ணா நகர் கோபுரம்
அண்ணா நகர் கோபுரம் 1968 உலக வர்த்தக கண்காட்சிக்காக கட்டப்பட்ட 138 அடி (42 மீட்டர்) உயரமான கோபுரமாகும்.[1] இது பி. எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களால் நிறுவப்பட்டது. அதன் பிரதான நுழைவாயில் 3 வது முதன்மை சாலை மற்றும் 6 வது முக்கிய சாலையில் உள்ளது. காலையில் நடைப் பயிற்சி செய்பவர்களாலும்,நடை ஓட்ட்ம்பயிற்சி செய்பவர்களாலும் இது பிரபலமாக உள்ளது. மேலும் மாலைவேளைகளில் குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் விளையாட மற்றும் ஓய்வெடுக்க பயன்படுகிறது. ஒரு பெயரளவு கட்டணத்தில் கோபுரத்திற்கு மேலேசென்று நகரத்தின் மிகச்சிறந்த காட்சிகளை காணமுடியும். கடந்த சில ஆண்டுகளாக சிலர் தற்கொலை செய்துகொண்ட காரணங்களுக்காக பாதுகாப்புக் கருதி உள்ளே நுழைவது கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது.[2] கோபுரம் மற்றும் பூங்கா இப்போது புதுப்பிக்கப்பட்டு ஒரு சறுக்கு விளையாட்டு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது பொது மக்கள் பயன்படுத்த மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.[3] பண்டைய தமிழ் தற்காப்பு கலையான சிலம்பாட்டம் இங்கே சிறந்த பயிற்சியாளர்களால் பயிற்றுவிக்கப்படுகிறது.