அண்ணா பல்கலைக்கழக வளாகப் பாலியல் வன்கொடுமை
இந்த கட்டுரை விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கோ கலைக்களஞ்சிய கொள்கைகளுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம். இதனை நீக்கப் பரிந்துரை செய்யப்படுகிறது.
கருத்துக்களை இதன் உரையாடல் பக்கத்தில் தெரிவிக்கவும். |
அண்ணா பல்கலைக்கழக வளாகப் பாலியல் வன்கொடுமை என்பது 2024 டிசம்பர் 23 ஆம் நாள் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமையைக் குறிப்பதாகும். பல்கலைக்கழக வளாகத்திற்குள் இரண்டாம் ஆண்டு பொறியியல் படித்துவரும் மாணவியொருவர் மீது டிசம்பர் 23 ஆம் நாள் இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத இருவரால் பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டுள்ளது.[1] நிகழ்வு நாளன்று மாலை கிறிஸ்மஸ் தொழுகைக்குச் சென்று வந்த தனது ஆண் நண்பருடன் இருக்கையில், அடையாளம் தெரியாத அந்த இருவர், ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, அந்த மாணவி மீது வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.[2] பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்ததன் பேரில் பிஎன்.எஸ்.எஸ். 64 ஆம் பிரிவின் படி வழக்குப் பதியப்பட்டது. மறைகாணி மூலம் நடைபெற்ற ஆய்விலும் விசாரணையையிலும் குற்றம்சாட்டப்பட்ட டி. தனசேகர் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அரசியல் மட்டத்தில் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.[3] பல மாணவர்கள் குழுவினர் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டினர்.[4]
நீதி மன்றத் தலையீடு
தொகுமுதல் தகவல் அறிக்கை வெளியாகி மாணவியின் அடையாளம் கசிந்ததால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக இவ்வழக்கை எடுத்துக் கொண்டது.[5] பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கவும், இந்த வழக்கை விசாரிக்க 3 ஐ.பி.எஸ். பெண் அதிகாரிகள் விசாரணை நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ Bureau, The Hindu (2024-12-25). "Two persons sexually assault Anna University student on campus" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/tamil-nadu/two-persons-sexually-assault-anna-university-student-on-campus/article69025546.ece.
- ↑ Service, Express Video (2024-12-25). "Anna University female student complains of rape by two men inside campus". The New Indian Express (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-12-25.
- ↑ Janardhanan, Arun (26 December 2024). "After sexually assaulting Chennai university student, roadside vendor took her number, threatened her to keep meeting him" (in en). The Indian Express. https://indianexpress.com/article/cities/chennai/sexually-assaulting-chennai-university-student-roadside-vendor-9745239/.
- ↑ "'வளாகம் மட்டுமல்ல, வகுப்பறையிலும் கூட பிரச்னைதான்' - அண்ணா பல்கலை. மாணவிகள் கூறியது என்ன?". பிபிசி. https://www.bbc.com/tamil/articles/cy0n18q2r2go. பார்த்த நாள்: 30 December 2024.
- ↑ "அண்ணா பல்கலை மாணவி வழக்கு; விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள்; ரூ. 25 லட்சம் இழப்பீடு: ஐகோர்ட் அதிரடி உத்தரவு". இந்தியன் எக்ஸ்பிரஸ். https://tamil.indianexpress.com/tamilnadu/madras-high-court-order-on-anna-university-sexual-assault-case-tamil-news-8573072. பார்த்த நாள்: 30 December 2024.
- ↑ "Anna University Sexual Assault Case : ரூ.25 லட்சம் இழப்பீடு... சிறப்பு விசாரணை குழு... அண்ணா பல்கலை. விவாகரத்தில் அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்!". நியூஸ்18 தமிழ். https://tamil.news18.com/tamil-nadu/hc-orders-25-lakh-compensation-for-anna-university-student-family-forms-special-probe-team-with-female-officers-nw-lks-1687524.html. பார்த்த நாள்: 30 December 2024.