அதரகுளிய கல்வெட்டு
அதரகுளிய கல்வெட்டு, இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் ஏரியாவ என்னும் ஊரைக் சேர்ந்த அதரகுளிய என்னும் இடத்தில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டு ஆகும். இதை முதன்முதலாக தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கல்வெட்டியலாளர் கிருஷ்ண சாஸ்திரி இந்தக் கல்வெட்டை வாசித்து வெளியிட்டார். இது அஞ்ஞூற்றுவன் அம்பலம் என்னும் வணிக அமைப்பைப் பற்றியது. இதில் தமிழ் எழுத்துக்களுடன் வட்டெழுத்துக்களும் கலந்து எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. வட்டெழுத்துக்கள் கலந்து எழுதப்பட்டு இலங்கையில் கிடைத்த ஒரே கல்வெட்டு இதுவே.[1]
காலம்
தொகுஇக்கல்வெட்டில் வரும் "இராசேந்திர சோழற்கியாண்டு.." என்னும் தொடரின் மூலம் இது இராசேந்திர சோழன் காலத்துக்கு உரியது என்பது தெளிவாகிறது. ஆனாலும், ஆட்சியாண்டு தொடர்பான தகவல்கள் வாசிக்க முடியாதபடி சிதைந்து விட்டமையால் கல்வெட்டின் சரியான காலத்தைக் கணிக்க முடியவில்லை.
உள்ளடக்கம்
தொகுஇது அஞ்ஞூற்றுவன் அம்பலம் என்னும் வணிகக் குழுவோது தொடர்பான ஏதோ ஒரு விடயம் பற்றியது என்பதை மட்டுமே தெளிவாகக் கூறக்கூடியதாக உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ பத்மநாதன், செ., 2006. பக். 125.
உசாத்துணைகள்
தொகு- பத்மநாதன், சி., இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள், கலாச்சார அலுவல்கள் திணைக்களம், கொழும்பு, 2006.