அதலைக்குன்றம்

அதலைக்குன்றம் சூழ்ந்த நாட்டுப்பகுதியை பரிசில் வழங்கும் பண்புடைய மன்னன் ஒருவன் ஆண்டுவந்தான். அவன் பெயர் இன்னதென அறிய முடியவில்லை.

அதலைக்காய்

அதலைக் குன்றத்தில் ஆழமான சுனை ஒன்று இருந்த்து. அதில் பூக்கும் குவளை, குளவி ஆகிய மலர்கள் பெரிதும் மணம் கொண்டவை என அக்காலத்தில் பெயர்பெற்றிருந்தன. இந்தப் பூக்களைத் தம் தலையின் முன்புறமாக நெற்றியில் தொங்கும்படி மகளிர் அணிந்துகொள்வார்களாம்.[1]

அதலைக்காய் என்று வழங்கப்படும் காய்வகை ஒன்று உள்ளது. இந்தக் காய் இந்த மலைப்பகுதியில் மிகுதியாக விளைந்ததால் இக் குன்றம் அதலைக் குன்றம் எனப் பெயர் பெற்றிருக்கலாம்.

மேற்கோள் பாடற்பகுதி

தொகு
  1. பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் அதலைக் குன்றத்து அகல்வாய்க் குண்டுசுனைக் குவளையொடு பொதிந்த குளவிநாறு நறுநுதல் தவ்வென மறப்பரோ – குறுந்தொகை 59
"https://ta.wikipedia.org/w/index.php?title=அதலைக்குன்றம்&oldid=2268211" இலிருந்து மீள்விக்கப்பட்டது