அதிபரின் அரசு மகிழுந்து (அமெரிக்கா)

அதிபரின் அரசு மகிழுந்து (அமெரிக்க சனாதிபதியின் மகிழுந்து. Presidential state car -United States) அமெரிக்க சனாதிபதியின் அதிகாரப்பூர்வ மகிழுந்தாகும். 1930 களின் பிற்பகுதியிலிருந்து, ஐக்கிய அமெரிக்காவின் ஒன்றிய அரசு சிறப்பான தொழில் நுட்பத்துடன், முதன்மையான உபகரணங்கள், சிறப்பு வசதிக்கான அம்சங்கள், கவச அமைப்பு, பாதுகாப்பு வசதிகள் போன்றவற்றுடன் சனாதிபதி பயன்படுத்துவதற்கான வாகனங்களை உருவாக்கி இருக்கிறது.

Presidential Limousine
GPA02-09 US SecretService press release 2009 Limousine Page 3 Image.jpg
உற்பத்தியாளர்ஜெனரல் மோட்டார்ஸ்
வேறு பெயர்"தி பீஸ்ட்", "கெடிலாக் ஒன்" (The Beast, Cadillac One)
உற்பத்தி2009
Model years2009
முன்பு இருந்தது2005 கெடிலாக் DTS அதிபரின் அரசு மகிழுந்து
வகுப்புஉல்லாச ஊர்தி
வடிவமைப்பாளர்கெடிலாக்
2009 உல்லாச ஊர்தியின் பக்கவாட்டுத் தோற்றம்.

இந்த மகிழுந்தை ஒரு நடமாடும் கோட்டை என்று சொல்லும் வகையில் அமைந்துள்ளது. எதிரிகளின் குண்டுகளிலிருந்து காப்பாற்றும் வடிவமைப்பு, எதிர் தாக்குதல் நடத்த தேவையான ஆயுதங்கள், நேர்ச்சியில் (விபத்து) இருந்து காப்பாற்றும் தொழில் நுட்பங்கள், எந்த இடத்திலிருந்தும் வெள்ளை மாளிகையைத் தொடர்பில் வைத்திருக்கும் சாதனங்கள் என அனைத்து வசதிகளையும் கொண்டது.

18 அடி நீளமும், 8 டன்கள் எடை கொண்டது. இதனுடைய சக்கரங்கள் பஞ்சர் ஆகாத தன்மையைக் கொண்டன. டீசல் கொள்கலன் வெடித்துச் சிதறாமல் இருக்க, தனித்துவமான நுரை உள்ள கருவி, இரவிலும் தெளிவாகக் காட்டக்கூடிய கேமரா போன்ற கருவிகளை உடைய இந்த மகிழுந்தை ஆபத்துக் காலத்தில் மிக வேகமாகவும், 180 பாகைச் சுழற்சி செய்து தப்பிக்கவும் பயிற்சி பெற்ற இரகசிய பாதுகாப்புப் படை ஓட்டுநர் இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.[1]

குறிப்புகள்

தொகு