அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி

அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி என்பவன் ஒரு சங்ககால அரசன். இவனை பற்றி ஆய்வாளர்களிடம் பல்வேறு பட்ட கருத்துகள் வழங்குகின்றன. சில ஆய்வாளர்கள் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியும் அதியமான் பொகுட்டெழினியும் ஒருவர் என்பர். சிலர் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி பொகுட்டெழினியின் தந்தையான அதியமான் நெடுமான் அஞ்சிக்கு முற்பட்டவன் என்றும் கூறுவர்.

அதியமான் நெடுமான் அஞ்சியின் தந்தை தொகு

பாட்டனின் பெயரையே பேரனுக்கும் வைக்கும் பழக்கம் தமிழருக்கு உண்டு என்பதால் அதியமான் எழினியின் பேரனே அதியமான் பொகுட்டெழினி என்பார் ஔவை துரைசாமி[1]. இவர் கூறியுள்ள முறையின் படி பின்வருமாறு அதியமான் வம்சம் அமைகிறது.

  1. அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி
  2. அதியமான் நெடுமான் அஞ்சி
  3. அதியமான் பொகுட்டெழினி

தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனிடம் போரிட்ட எழினி தொகு

செழியன் தன்னிடம் தலையானங்கானத்தில் போரிட்ட எழுவரையும் அவர்களின் ஊரிற்கே விரட்டிச் சென்று போரிட்டு வென்றான் என்பது சங்கப்பாடல்கள் தரும் செய்தி. அந்த எழுவருள் எழினி என்பானும் ஒருவன். அதனால் அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியும் இந்த எழினியும் ஒருவனே என்று முடிக்க துணிவர் சில ஆய்வாளர்கள்.[2]

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. http://www.tamilvu.org/slet/l1281/l1281pd1.jsp?bookid=28&page=336
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-06-06.