அதிவிரைவு பர்ஃபியூரால் சோதனை

அதிவிரைவு பர்ஃபியூரால் சோதனை (Rapid furfural test) என்பது குளுக்கோசு மற்றும் புருக்டோசு ஆகியவற்றை வேறுபடுத்தி அறிய உதவும் ஒரு வேதியியல் சோதனை ஆகும். இச்சோதனை மாலிச் சோதனையை ஒத்ததாகும். ஆனால், இச்சோதனையில் கந்தக அமிலத்திற்குப் பதிலாக ஐதரோகுளோரிக் அமிலம் பயன்படுத்தப்படுவதோடு கரைசலானது கொதிக்க வைக்கவும் படுகிறது..[1] நீர்த்த சர்க்கரைக் கரைசலானது, எத்தனாலிக்-1-நாப்தால் மற்றும் அடர் ஐதரோகுளோரிக் அமிலம் ஆகியவற்றுடன் சேர்க்கப்படுகிறது. பின்னர் கரைசலானது கொதிக்க வைக்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது, 30 நொடிகளுக்குள் கருஞ்சிவப்பு நிறம் தோன்றினால் சர்க்கரையானது புருக்டோசு ஆகும். 30 நொடிகளுக்குள் கருஞ்சிவப்பு நிறம் தோன்றாவிட்டால் சர்க்கரையானது குளுக்கோசு ஆகும்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. O.P. Agarwal. Advances Practical Oraganic Chemistry. Krishna Prakashan Media. p. 42.
  2. Dandekar (1 January 2004). Practicals And Viva In Medical Biochemistry. Elsevier India. p. 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8147-025-6.