அதுல் கேஷப்

அதுல் கேஷப் (Atul Keshap) பஞ்சாப் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்க இந்தியர் ஆவார். அதுல் கேஷப் இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்[1][2]. ரிச்சர்டு ராகுல் வர்மாவுக்கு அடுத்தபடியாக தெற்காசியப் பகுதிக்குத் தூதராக நியமிக்கப்படும் இரண்டாவது அமெரிக்க இந்தியர் ஆவார். 1994-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றி வரும் அதுல் கேஷப், இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அதிகாரியாக இருந்துள்ளார். தற்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவில் துணைச் செயலராக அவர் பொறுப்பு வகித்து வருகிறார்[3].

பெற்றோர் தொகு

பஞ்சாபில் பிறந்த இவரின் தந்தை கேஷப் சந்தர் சென், நைஜீரியாவில், ஐ.நா. வின் பொருளாதார வல்லுனராக பணியாற்றியவர். தாய், ஜே கல்வர்ட், அமெரிக்க வெளியுறவுத் துறையிலும், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திலும் பணியாற்றி உள்ளார்[4].

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதுல்_கேஷப்&oldid=1900072" இலிருந்து மீள்விக்கப்பட்டது