அதுல் சிட்னிஸ்
அதுல் சிட்னிஸ் (Atul Chitnis, பிறப்பு: பிப்ரவரி 20,1962 ) ஒரு இந்திய ஆலோசனை தொழில்நுட்பவியலாளர். போஸ்.இன் (FOSS .in) ஆசியா வின் இலவச மற்றும் திறந்த மூல மென்பொருட்கள் மாநாட்டு அமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.[1][2][3]
அதுல் சிட்னிஸ் | |
---|---|
பிறப்பு | பிப்ரவரி 20, 1962 பெர்லின், ஜெர்மனி |
இறப்பு | ஜூன் 3, 2013 (வயது 51) |
இருப்பிடம் | பெங்களூர், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அறியப்படுவது | FOSS.in |
வாழ்க்கைத் துணை | சுபா |
பிள்ளைகள் | கீதாஞ்சலி |
வலைத்தளம் | |
atulchitnis |
இவரது வாழ்க்கை
தொகு1989 ல், இவர் CiX என்ற தகவல் பலகை அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். இது தான் பல பயனர்களுக்கும் ஆன்லைன் சமூகங்களுக்குள் நுழைய ஒரு சிறந்த வாசலாக அமைந்தது. இவர் ஆசிரியராக PCQuest பத்திரிக்கையில் COMversations என்ற பத்தியில் எழுதுவார். இவர் இந்திய தொழில் தரவு தகவல்தொடர்பு, இணையம், அக இணையம் போன்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தி உள்ளார். ஒரு ஆலோசனை ஆசிரியராக PCQuest ல் பணியில் உள்ள போது PCQuest லினக்ஸ் முயற்சி என்ற துறையிலும் பங்களித்து வந்தார்.
ஒரு உறுப்பினராக போஸ் சமூகத்தில், லினக்ஸ் பயனர் குழு, பல்வேறு கருத்தரங்குகள் மூலமும், கட்டுரைகள் எழுதுவதன் மூலமும் இவர் இலவச மற்றும் திறந்த மூல மென்பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்து வந்தார். சிட்னிஸ் போஸ் சமூகம் நடத்தும் லினக்ஸ் பெங்களூர் கருத்தரங்குகளின் ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவர். இவர் இலவச / திறந்த மூல மென்பொருள்- தேசிய வள மையம் ஆசிரிய குழுவில் ஒருவராக பங்காற்றி உள்ளார். எந்த ஒரு அவைஆயினும் இவரது பேச்சு போஸ் தொழில்நுட்பம் மற்றும் அதில் பங்காற்றுவது பற்றி தான் இருக்கும்.
மறைவு
தொகுஇவருக்கு ஆகஸ்ட் 2012ல் குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டது. அதனால் 3 ஜூன் 2013ல் இறந்தார்.
குறிப்புகள்
தொகுவெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Venugopal, Vasudha (24 October 2010). "More Join the Chorus for Free Software". Chennai: தி இந்து. http://www.thehindu.com/news/cities/Chennai/article845424.ece.
- ↑ The BBS Documentary Library
- ↑ Rediff Guide to the Net: Features: The Way We Were