அத்திப்பறவை

பறவை இனங்களில் ஒன்று
அத்திப்பறவை
ஆஸ்திரேலேயசிய அத்திப்பறவை (இசுபேகோதெரெசு வியெலொட்டி)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பசாரிபார்மிசு
குடும்பம்:
ஒரியோலிடே
பேரினம்:
இசுபெகோதெரெசு
சிற்றினம்

உரையினை காண்க

வேறு பெயர்கள்
  • பிக்னோராம்பசு ரோசென்பெர்க், 1867
  • இசுபேகோதெரெசு

அத்திப்பறவை (Figbird) என்பது ஆஸ்திரேலியா, நியூ கினியா மற்றும் சிறு சுண்டாத் தீவுகள் உள்ளிட்ட நாடுகளை வாழ்விடமாக கொண்டவை. இவை முற்கால மாங்குயில் குடும்பத்தினைச் சார்ந்த ஒரு பேரினமாகும் (இசுபெகோதெரெசு).

வகைப்பாட்டியல் தொகு

முன்னதாக, மூன்று சிற்றினங்களும், ஒன்றாகக் கருதப்பட்டன, ஆனால் இன்று பறவையியல் ஆய்வாளர்கள் இவற்றைத் தனித்தனி சிற்றினங்களாகக் கருதுகின்றனர்.[1][2][3][4][5] இந்தச் சிற்றினங்கள் இறகு மற்றும் வாழ்விட உயிரியியல் அடிப்படையில் வேறுபடுத்தப்படுகிறது.

சிற்றினங்கள் தொகு

அத்திபறவை மூன்று சிற்றினங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன: [6]

படம் பொது பெயர் அறிவியல் பெயர் விநியோகம்
பச்சை அத்தி பறவை இசுபெகோதெரெசு விரிடிசு ரோட்டி மற்றும் திமோர் இந்தோனேசிய தீவுகள்
  வெட்டர் அத்தி பறவை இசுபெகோதெரெசு கைபோலூகசு இந்தோனேசிய தீவு வேட்டர்
  ஆஸ்திரேலேசியா அத்தி பறவை இசுபெகோதெரெசு வில்லோட்டி வடக்கு மற்றும் கிழக்கு ஆத்திரேலியா, தெற்கு நியூ கினியா மற்றும் கை தீவுகள்

விளக்கம் தொகு

இந்த பறவைகளில் பால் ஈருருமை நன்கு வெளிப்பட்டு உள்ளது. ஆண் பறவைகள் ஆலிவ் பச்சை நிற மேற்பகுதியினையும் கருப்பு தலையினையும் தெளிவான சிவப்பு முகத்தோலினையும் கொண்டுள்ளன.[7][8] பெண் பறவைகள் மந்தமான நிறமுடையவை, மேலே மந்தமான பழுப்பு நிறமாகவும், கீழே வலுவான இருண்ட நிறத்துடன் வெள்ளை நிறமாகவும் இருக்கும். இவை சாம்பல் நிற முக தோலையும், சாம்பல்-கருப்பு அலகினையும் கொண்டது.

நடத்தை மற்றும் சூழலியல் தொகு

"வழக்கமான" பழைய உலக ஓரியல்ஸ் பேரினத்துடன் ஒப்பிடும்போது இவை அதிக அளவில் பழங்களை உண்ணக்கூடியன. சிறிய பூச்சிகள், தேன் மற்றும் விதைகள் சில நேரங்களில் உணவாக எடுத்து கொள்ளும். சிறு கூட்டமாக கூடிவாழும் தன்மையுடையன. ஆஸ்திரலேசிய பறவைகள் கூடுகட்டும் தன்மையுடையன். கூடு கட்டும் பழக்கம் மற்ற இரண்டு சிற்றினங்களில் இன்னும் அறியப்படவில்லை.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Higgins, P. J., L. Christidis, & H. A. Ford (2008). Family Oriolidae (Orioles). Pp. 692-731 in: del Hoyo, J., A. Elliott, & D. A. Christie. eds. (2008). Handbook of the Birds of the World. Vol. 13. Pendulin-tits to Shrikes. Lynx Edicions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-45-3
  2. Dickinson, E. C. (editor) (2003). The Howard and Moore Complete Checklist of the Birds of the World. 3rd edition, w. updates. Christopher Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-6536-X
  3. Andrew, P. (1992). The Birds of Indonesia: A Check-list. Kukila Check-list No. 1. Indonesian Ornithological Society, Jakarta.
  4. Gill, F., M. Wright, & D. Donsker (2009). IOC World Bird Names. Version 2.1. Accessed 04-07-2009
  5. Christidis, L., & W. E. Boles (2008). Systematics and Taxonomy of Australian Birds. CSIRO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-643-06511-6
  6. "Orioles, drongos & fantails « IOC World Bird List". www.worldbirdnames.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-02-20.
  7. Simpson, K. (editor) & N. Day (illustrator) (1994). Field Guide to the Birds of Australia. 2nd edition. Christopher Helm. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7136-3930-X
  8. Coates, B. J., & K. D. Bishop (1997). A Guide to the Birds of Wallacea. Dove Publications Pty. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9590257-3-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்திப்பறவை&oldid=3182409" இலிருந்து மீள்விக்கப்பட்டது