அந்தபுரம்
அந்தபுரம் அல்லது அந்தபுரா ( சமஸ்கிருதம் अन्तःपुर )
என்பது ஒரு இந்திய அரசர்களின் வாழிடமாக அரண்மனை ஒரு பகுதி, அங்கு தான் அரசியும் அவரோடு சேர்ந்த மற்ற பெண்களும் தங்கி வாழுவார்கள். கிட்டத்தட்ட அரண்மனையின் 'பெண்கள்' பிரிவு என சொல்லலாம்,
பண்டைய காலங்களில் மன்னர்களின் அரண்மனையில் அரசியார் இருக்குமிடம் அந்தர்ப்புரம் எனப்பட்டது. (அந்தப்புரம் என்பது பிழை) அந்தர்ப்புரம் என்பதே சரி. (கதிரைவேற் பிள்ளையின் பேரகராதி காண்க) இச்சொல்லுக்கு உள் வீடு, அரசியார் மாளிகை என்று பொருள் கொள்ளலாம். (மொழிப்பயிற்சி-49: பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்!, தினமணிக்கதிர், 24 ஜூலை 2011)
பொதுவாக, அரண்மனையின் இந்த பகுதி அரசர், அரசியின், படுக்கையறை, குளியல் அறை மற்றும் ஒப்பனை அறை என்பதெல்லாம் இணைந்த பகுதியாக இருக்கும். இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரண்மனைகள் அந்தபுரத்தை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகக் கொண்டுள்ளன (உதாரணமாக, ஹம்பி மற்றும் மைசூர் அரண்மனை ). [2]
அரசர்களின் படுக்கையறையே அந்தப்பறம் ஆகும். மிகப் பெரிய நீச்சல் குளம் உள்ளிட்ட பல அறைகளை கொண்ட ஒரு மிகப்பெரிய பகுதியாகத்தான் அந்தப்புரம் இருக்கும். வெளிநபர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பாதுகாவலர்களாக பொதுவாக திருநங்கைகள் நியமிக்கப்பட்டு இருப்பார்கள்.
அங்கு அரசனுக்கு உரிமையான ராணியாக முடிசூடிக் கொண்ட மகாராணி. மற்றுமுள்ள மனைவிமார்கள், போர்களில் வெற்றி கொள்ளப்பட்ட எதிரி நாட்டின் அழகான இளம்பண்கள், நாட்டியத் தாரகைகள் போன்றவர்கள் வசிப்பார்கள்.
மன்னர்களின் அந்தப்புரங்களில் விலையுயர்ந்த கலைப்பொருட்கள் உயர்ந்த மாடங்கள், உப்பரிகைகள் இருக்கும். மனதை மயக்கும் இறக்குமதி செய்யப்பட்ட நறுமண பொருட்கள் நறுமணங்கள் நிறைந்திருக்கும்.
கர்நாடகா மைசூர் அரண்மனையிலும், டில்லியில் உள்ள செங்கோட்டையிலும், புராதான அந்தப்புரங்கள் தற்பொழுதும் பாதுகாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
'ஹரேம், ஜனானா என்பதெல்லாம் இதற்க்கு இணையான பிற மொழி சொற்கள் ஆகும்.
மேலும் பார்க்கவும்
தொகு- பெண்களுக்கு மட்டும் இடம்