அந்தராக்னி (இசைக்குழு)

பெங்களூரைச் சேர்ந்த ஒரு புத்திணைவு இசைக்குழு


அந்தராக்னி என்பது பெங்களூரைச் சேர்ந்த ஒரு புத்திணைவு இசைக்குழுவாகும், இது 2004 ம் ஆண்டில் கலைக்கப்பட்டது. இந்திய பாரம்பரிய, நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய ராக், இசை, பரப்பிசை முற்றும் வன்கு இசை ஆகியவற்றின் கலவையாக இருந்தது.

அந்தராக்னி
பிறப்பிடம்பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
இசை வடிவங்கள்இந்திய புத்திணைவு
இசைத்துறையில்1998–2004
உறுப்பினர்கள்ரகுபதி திட்சித் (குரலிசை/கித்தார்)
மனோஜ் ஜார்ஜ் (வயலின்)
ஆல்வின் பெர்னாண்டஸ் (முதன்மை கித்தார்)
ஜோஸி ஜான் (கித்தார்)
கோபிநாத் (தாளம்)
முன்னாள் உறுப்பினர்கள்எச் என் பாஸ்கர் (வயலின்)
ரவிச்சந்திர ராவ் (புல்லாங்குழல்)

அந்தராக்னி கலைக்கப்பட்ட பிறகு, அந்த இசைக்குழுவின் தலைவரான ரகுபதி தீட்சித, தி ரகு தீட்சித் திட்டத்தை உருவாக்கினார், இது பல்வேறு வகைகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து, ஒத்துழைத்து, மாற்றத்திற்கான இசைமற்றும் வெளிப்பாட்டை உருவாக்குவதற்கான ஒரு   அந்த திட்டம் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.

சொற்பிறப்பியல்

தொகு

அந்தராக்னி என்ற பெயர் இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளின் கலவையாகும் — அந்தர் என்றால் 'உள்ளே' மற்றும் அக்னி என்றால் நெருப்பு. ஒன்றாகச் சேர்த்து, அவை 'அந்தர் கி அக்னி' அல்லது 'அந்தராக்னி' என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. அந்த குழுவின் மனதில் கொதித்துக்கொண்டிருக்கும் நெருப்பைப் போன்ற இசையார்வத்தை குறிக்கும் வகையில் இந்த பெயர் பொருத்தமாக இருந்தது என்றல் மிகையல்ல.

வரலாறு

தொகு

ஆரம்ப ஆண்டுகளில்

தொகு

பெங்களூரின் மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறிய அந்தராக்னி, 1990களின் பிற்பகுதியில் பரதநாட்டிய கலைஞர், கிதார் கலைஞர்/பாடலாசிரியர்/பாடகர் என பன்முக திறமை கொண்ட ரகுபதி தீட்சித்தால் உருவாக்கப்பட்டது. ஒரு புதிய ஒலிப்பண்புகளை கொண்ட இசைக்கலைஞரைத் தேடிக்கொண்டிருந்த ரகுவின் காதுகளில் திறமையான வயலின் கலைஞர் எச்.என்.பாஸ்கரின் வயலின் சத்தம் ஒலித்தது. அதைத்தொடர்ந்து இருவரும் சேர்ந்து அந்தராக்னியை உருவாக்கினர். வயலின் மற்றும் கிட்டார் என்ற இசை ஆயுதங்களை எடுத்துக்கொண்டு ரகுவும் பாஸ்கரும் பெங்களூருக்குச் சென்றனர், அங்கு அவர்கள் இசை அலைகளை உருவாக்கத் தொடங்கினர். அவர்கள் புல்லாங்குழல் மற்றும் புகழ் பெற்ற தாள வாத்தியக்காரரான ரவிச்சந்திர ராவை சந்தித்தனர், இரண்டு பேர் கொண்ட குழு மூன்று ஆனது மேலும் மேலும் இசை புயல் பெங்களூருவை மையம் கொண்டு, இந்திய பாரம்பரிய, நாட்டுப்புற மற்றும் மேற்கத்திய வகை இசைத்துணுக்குகளின் கலந்து புத்திணைவு இசையை பரப்பியதன் மூலம், அந்தராக்னி பெங்களூரை உலுக்கத் தொடங்கியது.

உச்சக்கட்டம்

தொகு

பெங்களூரில், மேற்கத்திய பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்ற வயலின் கலைஞரான மனோஜ் ஜார்ஜை ரகு சந்தித்தார். ரகு, மனோஜ் ஜார்ஜ் மற்றும் பாஸ்கர் ஆகியோர் இணைந்து, இந்திய நாட்டுப்புறத் தாக்கங்களுடன் கூடிய சில மகிழ்ச்சிகரமான புத்துணர்ச்சியூட்டும் இசையைப் பாடத் தொடங்கினர். வெவ்வேறு பாணிகளில் பயிற்சி பெற்ற இரண்டு வயலின் கலைஞர்கள் பாடல்களில் மிருதுவான இசை சண்டைகளை ( ஜுகல்பந்தி என்று அழைக்கப்படும்) அவர்களின் கச்சேரிகளில் சேர்த்தனர், வழக்கமாக இசைக்குழுக்களில் இரண்டு கித்தார் கலைஞர்கள் தான்  முன்னணியில் இருப்பார்கள். இவர்களில் இசைக்குழுவிலோ, இரண்டு வயலின் கலைஞர்களே கோலாய்ச்சினர். நாடு முழுவதும் நடந்த பல்வேறு இசைப்போட்டிகளில் வெற்றிபெற்றதால், இசைக்குழுவின் புகழ் தொடர்ந்து வளர்ந்தது. ரேடியோ சிட்டி போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது [1] பெங்களூரில் சிறந்த இசைக்குழுவாக முடிசூட்டப்பட்டது. பிரையன் ஆடம்ஸ் பெங்களூரு நகரத்திற்கு வந்தபோது, [2] 30,000 பேர் கொண்ட கூட்டத்திற்கு முன்பாக அவர்களுக்காக முதல் பாடலை இசைக்க அழைக்கப்பட்டபோது, அந்தராக்னி இசைக்குழுவின் புகழ் உச்சக்கட்டத்திற்கு வந்திருந்தது.

துரதிர்ஷ்டவசமாக,தொழில்முறை இசைக்கலைஞர்களாக ரவி மற்றும் பாஸ்கர் ஆகியோரின் முன்னுரிமைகள் இசை என்பதில் இருந்து மாறுபட்டு தொழில், வேலை என இருந்ததால் குழுவைக் அமைதியாக கலைத்துவிட்டு ஒவ்வொருவரும்  வெளியேறினர்.   

இறுதி நாட்கள்

தொகு

2004 ம் ஆண்டு இவ்விசைக்குழு முற்றிலுமாக கலைக்கப்படும் வரை ரகுவும் மனோஜ் ஜார்ஜும் வெவ்வேறு இசைக்கலைஞர்களுடன் இணைந்து தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தினர்.

மேற்கோள்கள்

தொகு
  1. The Music Magazine - India's first and finest music e-zine
  2. The Music Magazine - India's first and finest music e-zine
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தராக்னி_(இசைக்குழு)&oldid=3653275" இலிருந்து மீள்விக்கப்பட்டது