அந்தரா கக், இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும், திரைப்படத் தயாரிப்பாளரும், ஆவணத் திரைப்பட இயக்குனருமாவார். இந்திய கலாச்சாரம் மற்றும் முக்கிய ஆளுமைகளைக் குறித்து படம் இயக்கியுள்ள இவர்,[1] சித்தார்த் கக் ( சுரபி என்ற தொலைக்காட்சித் தொடருக்காக அறியப்பட்டவர்) மற்றும் அவரது மனைவி கீதா சித்தார்த்தின் மகளாவார். அந்தரா, நடனத்தில் ஒரு வாழ்க்கை - தக்சா சேத் என்ற தனது முதல் முயற்சியிலேயே இந்திய ஆவணப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வழங்கும் விருதினை வென்றுள்ளார்.

அந்தரா கக்
பணிஇயக்குநர்
திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2002 ஆம் ஆண்டு முதல்
பெற்றோர்சித்தார்த் கக்
கீதா சித்தார்த்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி

தொகு

திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் குடும்ப பின்னணியைக் கொண்ட இவர், மும்பையில் உள்ள மிதிபாய் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பயின்றுள்ளார்.

தொழில்

தொகு

அந்தரா கக், தனது தந்தையும் ஆவணப்பட இயக்குனருமான சித்தார்த் கக்கிற்கு உதவி இயக்குநராக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். புனைகதை அல்லாத நிகழ்ச்சிகள் மற்றும் ஆவணப்படங்களில் முதன்மையாக உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். மேலும் தனது தந்தை சித்தார்த் கக் தயாரித்த சுரபி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

நடனத்தில் ஒரு வாழ்க்கை என்ற நடனக்கலைஞரான தக்சா சேத் பற்றிய ஆணவப் படத்தை முதன்முதலாக இயக்கி விருதுகளை பெற்ற இவர், மனோ யா நா மனோ என்ற 2006 ஆம் ஆண்டு வெளியான தொலைக்காட்சி தொடரையும் சம்பவ் கியா (என்ன சாத்தியம்) என்ற அமானுஷ்ய தொடரையும் இயக்கியுள்ளார். [2]

திரைப்படவியல்

தொகு
ஆண்டு திரைப்படம் இயக்குநர் தயாரிப்பாளர்
2002 ஆம் ஆம் அறிமுக இயக்குனருக்கான IDPA (இந்திய ஆவணப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்) விருதை வென்றார்
2006 ஆம்

மேற்கோள்கள்

தொகு
  1. Juwale, Vrunda (16 June 2002). "Creative daughters of celebrity parents". The Tribune (Chandigarh). http://www.tribuneindia.com/2002/20020616/herworld.htm#1. பார்த்த நாள்: 6 June 2018. 
  2. "Antara Kak joins the Colors fiction team". Indian Television. September 17, 2013. https://www.indiantelevision.com/headlines/y2k13/sep/sep71.php?page=4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தரா_கக்&oldid=4169274" இலிருந்து மீள்விக்கப்பட்டது