அந்திக்கடை சந்திக்கடை
அந்திக்கடை சந்திக்கடை என்பது ஒரு சிறுவர் விளையாட்டாகும்.[1] இது ஒரு மாலைநேர விளையாட்டு. இருகுழுக்களாக விளையாடுவர். ஒரு குழுவில் ஐவருக்குமேல் இருப்பர். ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இருவராக சென்று உத்தி பிரித்து ஒருவர் பூப்பெயர் அல்லது வண்ணம் அல்லது படப்பெயர் வைத்துகொண்டு வந்து தலைவர்களிடம் கூறுவர். தலைவர்கள் உத்தி பிரித்தல் முறையில் ஆட்களைத் தேர்வு செய்து கொள்வர்.
எதிர் எதிராக குழுக்களை அமரச் செய்தல் வேண்டும். குழு தலைவர் அந்த குழுவிற்கு பின் நிற்க வேண்டும். கையில் ஏதோ ஒரு பொருளை வைத்து கொண்டு குழு உறுப்பினர்களை நெருக்கமாக அமர செய்து இரு கைகளையும் பின்புறமாக வைத்துக்கொள்ள வேண்டும். குழு தலைவர் எதிர்க் குழுத் தலைவரைப் பார்த்து,
"அந்திக்கடை சந்திக்கடை
ஆவாரம் பூத்தக்கடை
வெள்ளி முளைச்ச கடை
டாப்பு டூப்பு
கள்ளன் வருகிறான்
கதவைச் சாத்திகொள்"
என்று கூறி தன் உறுப்பினர் ஒருவர் கையில் வைத்து விடுவார்.
எதிர்க் குழுத் தலைவர் எந்த உறுப்பினர் கையில் வைத்த பொருள் உள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும். எதிர் அணித்தலைவர் சரியாகக் கூறிவிட்டால் அக்குழு உறுப்பினர் ஒருவர் வெற்றிக்கு அடையாளமாக ஒரு காலை நீட்டி ஒரு புள்ளிக் கணக்கு வைத்துக்கொள்வார்.
தோல்வியுற்றால் வினவியவருக்கு ஒரு புள்ளி. அவர் உறுப்பினர் காலை நீட்டிக் கொள்வார். மீண்டும் வெற்றி பெற்றவர் அதே பாடலைக் கூறி ஆட்டத்தைத் தொடர்வார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "மண்ணும் மக்களும்". கட்டுரை. பல்சுவை கவாவியம். பார்க்கப்பட்ட நாள் 5 சூன் 2017.[தொடர்பிழந்த இணைப்பு]