அந்தூர் கந்தன் தர்ம சாஸ்தா கோயில், தோலடி
அந்தூர் கந்தன் தர்ம சாஸ்தா கோயில் இந்தியாவில் தெற்குகேரளாவில் உள்ள புகழ்பெற்ற சாஸ்தா கோயில்களில் ஒன்றாகும். நெய்யாட்டின்கரைக்கு கிழக்கே 13 இல் கிமீ தொலைவில், திருவனந்தபுரத்திற்கு 32 கிமீ தென்கிழக்கே உள்ளது. இங்கள்ள மூலவர் தர்மசாஸ்தா ஆவார். மேற்கு நோக்கிய மூலனவரைக் கொண்ட,கேரளாவில் உள்ள அரிய கோவில்களில் இக்கோயில் ஒன்றாகும்.
அந்தர்கோணத்தில் இக்கோயில் இருப்பதால் மூலவருக்கு இப்பெயர் வந்தது. அய்யப்பன் இப்பகுதியின் பாதுகாவலராகக் கருதப்படுகிறா. ஆதலால் அவர் ஆண்டூர்வாசன் என்றும் ஆண்டூரயன் என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலுக்கான ஆரம்ப கால வரலாறு இக்கோயிலின் கிழக்கே 750 அடி தொலைவில் உள்ள தோளடிச்சான் கோயிலில் காணப்படுகிறது.
மூலவர்
தொகுமூலவரான தர்ம சாஸ்தா சபரிமலையில் உள்ள மூலவரைப் போல உள்ளார். வலது கை அபய முத்திரையில், இறைவனிடம் (சரணாகதி) சரணடைந்த உண்மையான பக்தனின் அச்சமின்மையையும், பாதுகாப்பையும் குறிக்கிறது. இந்த முத்திரையானது சின் முத்திரை என்றும் ஞான முத்திரை என்றும் வழங்கப்படுகிறது. ஆத்மா, பரமாத்மாவிடம் இணைவதை இது குறிக்கிறது. ஆசனம் சின்முத்ரா அல்லது ஞான முத்ரா என்றும் அழைக்கப்படுகிறது
இடது கை, ஐந்து விரல்களாலும், கீழ்நோக்கிச் சுட்டியவாறு உள்ளது. அவை பஞ்சபூதங்களைக் குறிக்கின்றன.
துணைத்தெய்வங்கள்
தொகுகணபதி, துர்கா பகவதி, ஈஸ்வர கால பூதத்தன், நாகராஜா, நாகயட்சி, உள்ளிட்ட துணைத்தெய்வங்கள் உள்ளன. நுழைவாயிலில் மூலவரை நோக்கிய நிலையில் யானையின் சிலை உள்ளது.
விழா
தொகுமகரவிளக்கு மஹோத்ஸவம் என்பது இக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சிறப்பான திருவிழாவாகும்,