அந்தோணியார் வட்டம்

அந்தோணியார் வட்டம் என்னும் சிற்றூர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்திலூள்ள கல்குளம் வட்டத்தில் அமைந்துள்ளது. திங்கள் நகரிலிருந்து அழகியமண்டபம் செல்லும் மாநில நெடுஞ்சாலையின் நடுத்தொலைவில் அமைந்துள்ளது.

மக்கள்

தொகு

இங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையோர் கட்டுமானத் தொழிலாளிகளாக இருந்து வந்தனர். கேரளாவிற்கு வேலைக்குச் சென்றனர். தற்போது நிலைமை மெல்ல மாறுகிறது.

ஆலயம்

தொகு

ஊரின் நடுவே புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. அந்தோணியார் வட்டம் பங்கு கல்குறிச்சிப் பங்கின் கிளைப்பங்காக கோட்டாறு மறை மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஊரின் சந்திப்பில் புனித அந்தோணியார் குருசடி அமைந்துள்ளது. கல்லறைத் தோட்டத்தில் ஒரு சிறிய குருசடி அமைந்துள்ளது.

ஊரின் சந்திப்பில் புனித அந்தோணியார் குருசடி அமைந்துள்ளது. புனித அலோசியசு சகோதரிகள் மடம் (St. Aloysius Convent) ஒன்றும் அமைந்துள்ளது. புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி (St. Antony’s Middle School) ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

ஊரின் வரலாறு

தொகு

ஊரின் வரலாறு பற்றி பெரியளவில் வெளி வரவில்லை அந்தோணியார் வட்டம் ஊரின் வழியே அந்தோணியார் வட்டம் – ஆழ்வார்கோவில் சாலை அமைந்துள்ளது. இந்தச் சாலை முன்னோர் காலத்தில் வேணாடு அரசன் ஆழ்வார்கோவில் கோயிலுக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டது.அந்தோணியார் வட்டம் ஊரை அடுத்த திருவிதாங்கோட்டின் புனித சவேரியார் கட்டிய கோயிலும் புனித தோமையார் கட்டிய அரைப்பள்ளியும் குறிப்பிடத் தக்கன.

சமுதாய இயக்கங்கள

தொகு
  • கத்தோலிக்க சேவா சங்கம்
  • மரியாயின் சேனை
  • திருவழிபாட்டுக் குழு
  • கட்டிடக் குழு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோணியார்_வட்டம்&oldid=3599264" இலிருந்து மீள்விக்கப்பட்டது