அனா-ரவ்கிதி மைபி-கிளார்க்
ஹனா-ரவ்கிதி மைபி-கிளார்க் (Hana-Rawhiti Kareariki Maipi-Clarke)[1] (பிறப்பு: 2002) நியூசிலாந்து நாட்டின் மிக இளைய வயதுடைய பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் மாவோரி எனும் பழங்குடியைச் சேர்ந்த பெண் அரசியல்வாதி ஆவார்.[2] இவர் தனது 21வது அகவையில் தே பாட்டி மாவோரி கட்சியின் வேட்பாளராக, செப்டம்பர் 2023ல், நியூசிலாந்து பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்டு வென்றார்..[3] 1853 தேர்தலில் ஜேம்ஸ் ஸ்டூவர்ட்-வொர்ட்லிக்கு (20 ஆண்டுகள் 7 மாதங்கள்) அடுத்த இளைய நாடாளுமன்ற உறுப்பினர் ஹனா-ரவ்கிதி மைபி-கிளார்க் ஆவார்.
ஹனா-ரவ்கிதி மைபி-கிளார்க் | |
---|---|
2024ல் மைபி கிளார்க் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 அக்டோபர் 2023 | |
முன்னையவர் | நனைய்யா மகுதா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | செப்டம்பர், 2022 |
அரசியல் கட்சி | மாவோரி கட்சி |
தொழில் | அரசியல்வாதி |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்
தொகுஹனா-ரவ்கிதி மைபி-கிளார்க், மாவோரி மொழி ஆர்வலரான, ஹனா தே ஹேமாராவின் பேத்தி ஆவார்..[4] 2020 ஆம் ஆண்டில் கேப்டன் ஹாமில்டன் சிலை அகற்றப்படுவதற்கு பங்களித்த டைதிமு மைபி ஹனா-ரவ்கிதி மைபி-கிளார்க்கின் தாத்தா ஆவார்.. நியூசிலாந்து நாட்டின் நிர்வாகக் குழுவிற்கு நியமிக்கப்பட்ட முதல் மாவோரி நாடாளுமன்ற உறுப்பினரான வை கேட்டேன் மைபி கிளார்க்கின் கொள்ளு தாத்தா.ஆவார்.[5]
மைபி-கிளார்க் தனது கல்வியை ஹன்ட்லியில் உள்ள தே வாரேகுரா'வில் பயின்றார்.[6] 17 வயதில், அவர் மரமடகா பற்றிய மஹினா என்ற புத்தகத்தை வெளியிட்டார். மாவோரி சந்திர நாட்காட்டி. ரங்கி மாதாமுவா மற்றும் மாதரிக்கியைப் பற்றி விரிவுரை செய்தபோது, மைபி கிளார்க் ஆராய்ச்சி செய்ய தூண்டப்பட்டார்.
அரசியல் வாழ்க்கை
தொகு14 அக்டோபர் 2023 அன்று நடைபெற்ற நியூசிலாந்து நாடளுமன்றப் பொதுத் தேர்தலில், மைபி-கிளார்க் 2,911 வாக்குகள் வித்தியாசத்தில் தற்போதைய தொழிலாளர் உறுப்பினரான நனையா மஹுதாவைத் தோற்கடித்தார்.[7] 21 வயதில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மைபி-கிளார்க் நியூசிலாந்தின் இரண்டாவது இளைய நாடாளுமன்ற உறுப்பினரானார்.[8][6][9] 170 ஆண்டுகளுக்கு முன்னர் 1853ஆம் ஆண்டில் ஜேம்ஸ் ஸ்டூவர்ட்-வொர்ட்லிக்கு அடுத்தபடியாக மைபி கிளார்க் இரண்டாவது இளையவர் ஆவார். மாவோரி பழங்குடிகள் நலன்கள் குறித்து மைபி கிளார்க் நாடாளுமன்றத்தில் தனது கன்னி உரையில் அழுத்தம் திருத்தமாக பேசினார்.
14 நவம்பர் 2024 அன்று மைபி கிளார்க், மாவோரி பழங்குடி மக்கள் தொடர்பான வைத்தாங்கி ஒப்பந்தச் சட்டத்திருத்த மசோதா நகலை கிழித்து எறிந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.[10][11][12][13]இதனால் அவைத்தலைவர் மைபி கிளார்க்கை 24 நேரத்திற்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்தார். [14]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Members Sworn". New Zealand Parliament. 5 December 2023. Archived from the original on 11 December 2023. பார்க்கப்பட்ட நாள் 11 December 2023.
- ↑ Toby Manhire (20 August 2023). "Te Pāti Māori set to bring youngest MP to parliament for 170 years". The Spinoff. https://thespinoff.co.nz/live-updates/20-08-2023/te-pati-maori-set-to-bring-youngest-mp-to-parliament-for-170-years.
- ↑ "Te Pāti Māori says candidate Hana-Rāwhiti Maipi-Clarke's home invaded, vandalised in 'politically motivated attack'". Newshub. 29 September 2023 இம் மூலத்தில் இருந்து 2 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231002101009/https://www.newshub.co.nz/home/politics/2023/09/te-p-ti-m-ori-says-candidate-hana-r-whiti-maipi-clarke-s-home-invaded-vandalised-in-politically-motivated-attack.html.
- ↑ Rolleston, Te Aorewa (29 June 2023). "Granddaughter of Hamilton statue activist to contest Hauraki-Waikato seat". Waikato Times இம் மூலத்தில் இருந்து 15 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231015124407/https://www.waikatotimes.co.nz/a/politics/350026009/granddaughter-hamilton-statue-activist-contest-hauraki-waikato-seat.
- ↑ Husband, Dale (23 August 2023). "Hana Rawhiti Maipi-Clarke – Te Pāti Māori Candidate for Hauraki Waikato". Waatea News இம் மூலத்தில் இருந்து 4 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231004200034/https://waateanews.com/2023/08/23/hana-rawhiti-maipi-clarke-te-pati-maori-candidate-for-hauraki-waikato/.
- ↑ 6.0 6.1 "Te Pāti Māori announces list, may elect NZ's youngest MP, aged 20". Radio New Zealand. 20 August 2023 இம் மூலத்தில் இருந்து 22 August 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230822084637/https://www.rnz.co.nz/news/political/496209/te-pati-maori-announces-list-may-elect-nz-s-youngest-mp-aged-20.
- ↑ "Hauraki-Waikato – Official Result". Electoral Commission. Archived from the original on 23 November 2023. பார்க்கப்பட்ட நாள் 3 November 2023.
- ↑ "Waikato election 2023 results". The New Zealand Herald. 15 October 2023 இம் மூலத்தில் இருந்து 19 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231019174342/https://www.nzherald.co.nz/waikato-news/news/waikato-elections-the-latest-election-results-from-around-the-waikato/KH3DWR67C5DYFFSF4YB4DYCLUA/.
- ↑ "Youngest members of Parliament – New Zealand Parliament". parliament.nz. Archived from the original on 13 November 2020. பார்க்கப்பட்ட நாள் 24 September 2023.
- ↑ New Zealand Youngest MP Strikes Again In Parliament With Maori Haka Over Contentious Indigenous Bill
- ↑ மாவோரி மக்களுக்கு எதிரான சட்டத்திருத்த மசோதா நகல் கிழிப்பு
- ↑ "MP rips up bill, leads haka as NZ parliament erupts over Waitangi treaty bill – video". The Guardian. https://www.theguardian.com/world/video/2024/nov/14/mp-rips-up-bill-leads-haka-as-nz-parliament-erupts-over-waitangi-treaty-bill-video.
- ↑ "Watch: Haka interrupts vote for the Treaty Principles Bill" (in en-nz). RNZ. 14 November 2024. https://www.rnz.co.nz/news/national/533795/watch-haka-interrupts-vote-for-the-treaty-principles-bill.
- ↑ Manch, Thomas (14 November 2024). "'Shame': Outcry as Treaty Principles Bill debated in Parliament". The Post (Stuff) இம் மூலத்தில் இருந்து 15 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20241115011419/https://www.thepost.co.nz/politics/360487268/shame-outcry-treaty-principles-bill-debated-parliament.