அனா சாகர் ஏரி
அனா சாகர் ஏரி (Ana Sagar Lake) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலுள்ள அச்மீர் நகரில் அமைந்துள்ள ஒரு செயற்கை ஏரியாகும். செயற்கை ஏரியான அனா சாகர் ஏரி 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட இந்தியாவில் இருந்த இராச்சியம் ஒன்றை ஆண்ட பிருத்திவிராச் சௌகான் என்பவரின் தாத்தாவான அர்னாராசா என்றழைக்கப்பட்ட அனாச்சி சௌகான் என்பவரால் கி.பி. 1135 - 1150 ஆண்டில் கட்டப்பட்டு அவருடைய பெயர் சூட்டப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியானது உள்ளூர் மக்களின் உதவியுடன் கட்டப்பட்டது. அனா சாகர் ஏரி 13 கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிந்துள்ளது. ஏரியைச் சுற்றியுள்ள கூடாரங்களை 1637 ஆம் ஆண்டில் சாச்சகான் கட்டினார். தவுலத் பாக் தோட்டம் ஜஹாகாங்கீரால் ஏற்படுத்தப்பட்டது. ஏரிக்கு அருகிலிருந்த ஒரு மலையில் பிரித்தானியர்கள் தங்குவதற்குப் பயன்படும் ஒரு சுற்றுலா மாளிகையும் அமைக்கப்பட்டிருந்தது. ஏரிக்கு நடுவில் படகு மூலம் சென்றடையக்கூடிய ஒரு தீவும் இருக்கிறது. தவுலத் பாக் தோட்டத்திற்குக் கிழக்குப் பகுதியிலிருந்து படகுகளை வாடகைக்கு எடுக்கலாம். ஏரியின் அழகிய காட்சியைப் பிடிக்க சவுப்பட்டி மற்றும் யெட்டி நடைபாதைகள் மற்றும் கூடாரங்களை அடுத்து உள்ளன. அஜ்மீரில் உள்ள மிகப்பெரிய ஏரியான இது 5 சதுரகிலோமீட்டர் அளவுக்கு பெரிய நீர்ப்பிடிப்பு பகுதியைக் கொண்டுள்ளது. ஏரியின் அதிகபட்ச ஆழம் 4.4 மீட்டர்கள் ஆகும். 4,750,000 கனமீட்டர் அளவுக்கு நீர் கொள்ளளவு கொண்டதாக அனா சாகர் ஏரி உள்ளது. ஏரிப்படுகைகளில் உள்ள நீர்பிடிப்புப் பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் செய்யப்படுவதற்கு இராசத்தான் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது[1][2].
-
அனா சாகர் ஏரியில் இடம் பெற்றுள்ள கூடாரங்கள்.
-
ஏரியிலுள்ள ஒரேயொரு தீவு. இது ஏ.ஆர்.வி குழுமத்திற்கு சொந்தமானது.
-
முகலாயர் காலத்துத் தூண்கள்
-
ஏரியிலிருந்து தெரியும் அஜ்மீர் நகரம்
-
ஏரியின் அழகிய தோற்றம்.
அனா சாகர் ஏரி Ana Sagar Lake | |
---|---|
அனா சாகர் ஏரி | |
அமைவிடம் | அஜ்மீர், இராசத்தான் |
ஆள்கூறுகள் | 26°28′30″N 74°37′30″E / 26.475°N 74.625°E |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ana Sagar Lake". Times of India Travel. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.
- ↑ "Ana Sagar Lake Ajmer, Rajasthan". www.tourmyindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-18.