அனிசோயில் குளோரைடு
வேதிச் சேர்மம்
அனிசோயில் குளோரைடு (Anisoyl chloride) என்பது C8H7ClO2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெத்தாக்சிபென்சாயில் குளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. குறிப்பாக இச்சேர்மம் ஓர் அரோமாட்டிக் அசைல் குளோரைடு என்று கருதப்படுகிறது. அனிசிக் அமிலத்தை பயன்படுத்தி கார்பாக்சிலிக் அமிலத்தின் ஐதராக்சில் குழுவை , ஒரு குளோரைடு குழுவால் மாற்றுவதன் மூலம் அனிசோயில் குளோரைடு உருவாகிறது. ஆர்த்தோ-, மெட்டா- மற்றும் பாரா என்ற அனிசோயில் குளோரைடின் மூன்று மாற்றியங்கள் காணப்படுகின்றன. இவற்றின் கட்டமைப்புகள் அரீன் பதிலீட்டு முறையில் வேறுபடுகின்றன. வளையத்தில் உள்ள மெத்தாக்சி குழுவின் இருப்பிடம் ஓர் அசைல் ஆலைடில் உள்ளது போல இருக்கிறது.