அனில் ஜான்சன்

இந்திய இசையமைப்பாளர்

அனில் ஜான்சன் (Anil Johnson)(மலையாளம்: അനില് ജോണ്സണ്) மலையாளத் திரையுலகில் பணிபுரியும் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும், இசைப்பதிவுத் தயாரிப்பாளரும் ஆவார். [1] [2] திரைப்படங்கள் தவிர, இவர் விளம்பரங்கள், ஆவணப்படங்கள், பெருநிறுவன படங்கள், குறும்படங்கள் , இசைத் தொகுப்புகளுக்காக இசையமைத்துள்ளார். ஒரு முக்கிய இசையமைப்பாளராக மாறுவதற்கு முன்பு, இவர் இந்திய இசைத் துறையில் பல இசையமைப்பாளர்களுடனும் இசைக்குழுக்களுக்காகவும் ஒரு அமைப்பாளராக பணியாற்றினார். இவர் 2000களின் நடுப்பகுதியில் தொலைக்காட்சி விளம்பரங்களையும் இயக்கியிருந்தார்.[3]

அனில் ஜான்சன்
அனில் ஜான்சன்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்அனில் ஜான்சன்
பிறப்புகொச்சி துறைமுகம், கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்திரையிசை, மேல்நாட்டுச் செந்நெறி இசை
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடலாசிரியர், பதிவுத் தயாரிப்பாளர்
இசைக்கருவி(கள்)கின்னரப்பெட்டி & சிந்த்தெசிசர், பக்கவாத்தியம்

சுயசரிதை

தொகு

அனில் ஜான்சன் 24 மார்ச் 1973 அன்று கொச்சி துறைமுகப் பகுதியில் பி. ஜே. ஜோசப் -தங்கம்மா ஜோசப் ஆகியோருக்கு பிறந்தார். இவருக்கு பெனில் ஜார்ஜ் என்ற ஒரு இளைய சகோதரர் உள்ளார். அனில் ஜான்சன் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் இளங்கலைப் பட்டத்தையும், டாடா யுனிசிஸில் முதுகலை சான்றிதழ் படிப்பும் முடித்தார். பாடகர்/ விசைப்பலகை கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் நாடகங்கள், இசைத் தொகுப்புகள், விளம்பரங்கள், ஆவணப்படங்கள், நிறுவனத் திரைப்படங்கள், குறும்படங்கள், திரைப்படங்களுக்கு இசையமைத்தார். [4]

திருமணம்

தொகு

இவருக்கு அஞ்சனா ஜாய் என்பவருடன் திருமணமாகி விவியன், தியா என்ற இரு குழந்தைகள் உள்ளனர். தனது நான்கு வயதில் பாரம்பரிய கர்நாடக இசையையும், 13 வயதில் கின்னரப்பெட்டி பாடங்களையும் பெற்றார்.

சான்றுகள்

தொகு
  1. "Anil Johnson". Facebook. பார்க்கப்பட்ட நாள் 2013-10-07.
  2. "Anil Johnson - Music Composer From Cochin, Kerala". Fandalism.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-07.
  3. "ANIL JOHNSON Music, Lyrics, Songs, and Videos". Reverbnation.com. Archived from the original on 22 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2013-10-07.
  4. "Anil Johnson - India | LinkedIn". In.linkedin.com. Archived from the original on 2013-10-08. பார்க்கப்பட்ட நாள் 2013-10-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனில்_ஜான்சன்&oldid=3792624" இலிருந்து மீள்விக்கப்பட்டது