அனுஜா பிரபு தேசாய்
அனுஜா பிரபு தேசாய் (Anuja Prabhudessai-பிறப்பு: பிப்ரவரி 8,1962) இந்தியாவின் மகாராட்டிராவில் உள்ள பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார். கோவா சேர்ந்த முதல் பெண் நீதிபதி ஆவார்.
வாழ்க்கை.
தொகுபிரபு தேசாய் கோவா மப்பூசாவில் பிறந்தார்.[1] ஆங்கில இலக்கியம் மற்றும் சட்டம் பயின்றார். இதன் பின்னர் 1985-இல் வழக்கறிஞர் பணியினைத் துவங்கினார்.
நீதித்துறை வாழ்க்கை
தொகுபிரபு தேசாய் கோவா நீதிமன்றம் மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கோவா இருக்கையிலும் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1991ஆம் ஆண்டில் குடிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் (முதல் வகுப்பு) ஆனார்..மேலும் 2012ஆம் ஆண்டில் கோவாவின் பனாஜியில் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். வடகோவா குழந்தைகள் நீதிமன்றம் மற்றும் சட்ட சேவைகள் ஆணையத்திற்கும் தலைமை தாங்கினார்.[1]
2010ஆம் ஆண்டில், வாகன விபத்து உரிமைகோரலில் ஒரு மனுதாரருக்கு இழப்பீடு வழங்குவதில் முறைகேடு செய்ததாகக் கூறி பிரபு தேசாய் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.[2][3] செய்த தவறுகளிலிருந்து விடுவிக்கப்பட்டு அதே ஆண்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தால் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார். வழக்கறிஞர்கள் சங்கங்கள் இவரது இடைநீக்கத்தை எதிர்த்தன, மேலும் ஒரு தூதுக்குழு உயர் நீதிமன்றத்தைச் சந்தித்து இவரை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரினர்.[4]
2013ஆம் ஆண்டில், மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவர் பிரபு தேசாய் மீது கொலைக் குற்றம் தொடர்பான வழக்கில் பிணை வழங்க மறுத்தது தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சாட்டினார். உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி ஒருவர் தவறான குற்றச்சாட்டிலிருந்து இவரை விடுவித்த போதிலும், மும்பை உயர் நீதிமன்றம் அவமதிப்பு தீர்ப்பை உறுதிப்படுத்தியது. இந்திய உச்ச நீதிமன்றம் பிரபுதேசாயின் மேல்முறையீட்டை அனுமதித்ததுடன், ஒரு நீதிபதியாக இவரது செயல்திறன் குறித்து உயர் நீதிமன்றம் கூறிய சில கருத்துக்களைப் பதிவிலிருந்து நீக்கியது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பிணை வழங்குவது குறித்து அமர்வு நீதிமன்றத்திற்கு நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியது.[5]
மார்ச்சு 2014-இல், பிரபு தேசாய் கோவாவிலிருந்து உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண் ஆனார். பம்பாய் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணியில் சேர்ந்தார்.[3][6]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Anuja Prabhudessai". North Goa Courts, Government of Goa. Archived from the original on 3 December 2012. பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.
- ↑ "High court issues order reinstating senior judge | Goa News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). December 22, 2010. பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.
- ↑ 3.0 3.1 Kamat, Prakash (2014-03-02). "First Goan woman judge in Bombay High Court" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/other-states/first-goan-woman-judge-in-bombay-high-court/article5743214.ece.
- ↑ "Lawyers seek justice for dismissed district judge". The Times of India (in ஆங்கிலம்). February 18, 2010. பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.
- ↑ "Anuja Prabhudessai v State of Goa". Indian Kanoon. 9 January 2013.
- ↑ "Former Chief Justice of the Gujarat High Court Justice (Retd) Gurudas D Kamat felicitating Justice Anuja Prabhudessai on becoming Judge of the Bombay High court". oHeraldo. பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.