அனுமதிச் சீட்டு
அனுமதிச் சீட்டு (permission slip) என்பது ஒரு பள்ளி அல்லது பிற அமைப்பு ஒரு மாணவரிடம் களப்பயணம் செல்வதற்காக பெற்றோரிடம் அனுமதி பெறுவதற்காக வழங்கப்படும் படிவம் ஆகும்.[1]
ஒரு அமைப்பு ஒரு மாணவரை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதற்கு, பல இடங்களில் சட்டப்படி அனுமதிச் சீட்டுகள் தேவைப்படுகின்றன. சிறுவர்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களது பெற்றோர்களோ அல்லது சட்டரீதியிலான பாதுகாவலர்களோ இத்தகைய அனுமதியினை வழங்குவர்.
அனுமதி சீட்டில் காணக்கூடிய தகவலில் மாணவரின் பெயர், களப்பயணம் நிகழும் இடம் மற்றும் அவசரகாலத்திற்கு தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண், முகவரி ஆகியவை அடங்கும்.
வயது வந்த மாணவர்களுக்கான விண்ணப்பம்
தொகுசில பள்ளிகள் முதிர் அகவையர் மாணவர்களை தங்களது சொந்த அனுமதி சீட்டில் கையெழுத்திட அனுமதிக்கின்றன; மற்ற பள்ளிகள் மாணவரின் பெற்றோர் படிவத்தில் கையொப்பமிட வேண்டும் என்று கோருகின்றன. பல முதிர் அகவையர் மாணவர்கள் பெற்றோரின் கையொப்பத்திற்கான தேவையை எதிர்க்கிறார்கள், ஏனெனில் தாங்கள் தங்களுக்கு விருப்பமான நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு பெற்றோரிடம் சட்டரீதியாக எந்த அனுமதியும் பெறத் தேவையில்லை என கருதுகின்றனர்.